மாரி சீரியலில் மாரிக்கு எதிராக எது செய்தாலும், அது அவருக்கு சாதகமாக அமைவதாக தாரா, ஜாஸ்மின் இருவரும் கடுப்பாகும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  முன்னதாக சூர்யா ஜாஸ்மினுக்கு மோதிரம் போடும்போது மாரி குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறார்.


தாம்பூல தட்டு அனைத்தையும் தட்டி விடுவதோடு,  மோதிரத்தையும் தட்டி விட மோதிரம் வேறொரு இடத்தில் போய் விழுந்து விடுகிறது. அனைவரும் மோதிரத்தை தேட, மோதிரம் கிடைக்காமல் போக தாரா கோபமாகி மாரியை திட்டுகிறார். இறுதியில் மாரி மயக்கம் போட்டு விழுகிறார். 






அவரை ரூமுக்கு தூக்கிச் சென்ற சூர்யா, எதற்காக மாரி இப்படி பண்ணுகிறார். என்ன நடந்திருக்கும் என யோசிக்கிறார். ஹாசினியும் சூர்யாவும் மாரியிடம் கண்டிப்பா நீ குடித்திருக்க மாட்டாய். யாரோ உனக்கு கலந்து கொடுத்திருக்காங்க. உண்மையை சொல்லு என்று கேட்கிறார்கள். அப்போது ஜாஸ்மின் தாராவிடம், ஒருவேளை மாரி, மதுபானம் நான் தான் கொடுத்தேன் என்று சூர்யாவிடம் சொல்லிவிட்டால் என்ன செய்ய எனக் கேட்கிறார். உடனே சூர்யா ஜாஸ்மினை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிடுவானோ என்ற பதற்றத்தில்  தாரா மேலே ரூமுக்கு வருகிறார்.


ஆனால் இறுதியில் மாரி தனக்கு தெரியவில்லை என்று சொல்லும் போது, மாரியின் அம்மா தீபாவளி சீர் கொடுக்க வருகிறார்.  ஜாஸ்மின் விஷயம் அம்மாவுக்கு தெரிய வேண்டாம், தெரிந்தால் வருத்தப்படுவாங்க என்று சொல்கிறார். சூர்யாவும் தயவு செய்து யாரும் மாரி அம்மாவிடம் ஜாஸ்மின் விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லி கீழே வர தெய்வானையின் தீபாவளி சீரை தாரா அவமானப்படுத்துகிறாள்.  


பிறகு தெய்வானை ஸ்ரீஜாவுக்கும் மாரிக்கும் தனித்தனியாக தீபாவளி சீர் செய்யும் நிலையில், அதை பார்த்த ஹாசினி இருவரையும் வைத்து மாரி கையால் சூர்யாவுக்கும், சூர்யா கையால் மாரிக்கும் மோதிரம் மாற்ற சொல்கிறார். இதை பார்த்த தாரா, ஜாஸ்மின் கடுப்பாகின்றனர்.மேலும் நாம் எது செய்தாலும் மாரிக்கு சாதகமாக முடிகிறது என்று கடுப்பாகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.