பாக்கியலட்சுமி சீரியலில் ஏரியா செகரட்டரி தேர்தலில் வெற்றி பெறும் பாக்யா, ராதிகாவை சரமாரியாக விமர்சிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.


அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.






குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.


ராதிகாவை விமர்சித்த பாக்யா 


ஏரியா செகரட்டரி தேர்தலில் வெற்றி பெற்ற பாக்யா மேடையில் பேசுகிறார். யாரோ சொன்னார்கள் படித்தவர்கள் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று. நான் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்தான். ஆனால் கிராமத்தில் படிக்காத மக்கள் கூட தங்கள் பிரச்சினைக்காக போராடுவர்கள் என சரமாரியாக ராதிகாவை விமர்சிக்கிறார்.


அங்கிருந்து கோபி அவரை கூட்டிச் செல்லலாம் என நினைக்கும் நிலையில் செல்வி, ராமமூர்த்தி இருவரும் இப்படி பேசிட்டு இருக்கும்போது நடுவுல போறது என்ன பழக்கமோ என சொல்ல , இருவரும் நிற்கின்றனர். பின்னர் பாக்யா தான் ஏரியா மக்களுக்காக என்றும் உறுதியாக நிற்பேன் என சொல்லிவிட்டு வீட்டுக்கு செல்கிறார். 


வீட்டுக்குச் செல்லும் அவருக்கு ஆரத்தி, மாலை என சகல மரியாதைகளும் பண்ணப்படுகிறது. அதேசமயம் செழியன், உனக்கு இந்த ஏரியாவுல எதிர்ப்பும் இருக்கிறது. அதனால அசோஷியேசன் கணக்கு எல்லாம் சரியா இருக்கும்படி பார்த்துக்க. இல்லன்னா தப்பு உன்மேல தான்னு சொல்லிடுவாங்க என சொல்கிறார். அப்போது ராமமூர்த்தி நான் கோபி வீட்டுக்கு போய் அவன் மூஞ்சி எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வர்றேன் என தெரிவிக்கிறார். 


மாட்டிக்கொண்ட கோபி 


இந்த பக்கம் வீட்டுக்கு வரும் ராதிகா கோபியிடம் சண்டைக்குச் செல்கிறார். எனக்கு எல்லா இடத்துலேயும் தோல்வியா இருக்கு என அழுது புலம்புகிறார். இதை நான் சாதாரணமாக விடமாட்டேன். நான் டீச்சர் ரொம்ப அப்பாவி அப்படின்னு நினைச்சிட்டேன். ஆனால் அவங்க அப்படி இல்ல என சொல்ல, இதைத்தானே நானும் சொன்னேன் என பதிலுக்கு ராதிகாவை கோபி உசுப்பேற்றி விடுகிறார். இதற்கிடையில் பாக்யாவுக்கு திருமண மண்டப ஓனர் ராஜசேகர் உதவியுடன் பேங்க் லோக் கிடைக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.