தமிழ் சீரியல் உலகியின் ராணியாக வலம் வருபவர் ’ராஜா ராணி’ புகழ் ஆல்யா மானசா. பிரபல நடன நிகழ்ச்சி மூலம் முதலில் அறியப்பட்ட ஆல்யா மானசா விஜய் டிவியின் ’ராஜா ராணி’ தொடர் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் சென்று சேர்ந்தார்.


’ராஜா ராணி’ தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்த ஆல்யா மானசா அவரை சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்னும் சின்னத்திரையில் இந்த ஜோடி கலக்கி வந்த நிலையில், முதல் குழந்தை பிறந்த பின் ’ராஜா ராணி 2’ தொடரிலும் நடிக்கத் தொடங்கினார்.


ஆனால் தன் இரண்டாவது பிரசவத்துக்காக தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகினார் ஆல்யா. எனினும் தன் சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் எப்போதும் தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் ஆல்யா.


சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, தனது யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து தன் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.


இந்நிலையில், சன் டிவியின் புதிய சீரியலான ’இனியா’ மூலம் ஆல்யா மானசா  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


 


 






இந்நிலையில், ஆல்யா மானசா சன் டிவி சீரியலுக்காக தன் சம்பளத்தை நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடித்துவந்தபோது ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம் வரை ஆல்யா சம்பளம் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.