தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மரியாவுக்கு மாரி உயிர் பிழைத்த விஷயம் தெரிய வர அவள் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க,


அதாவது, மரியா ஒரு நர்ஸை கட்டி போட்டு நர்ஸ் கெட்டப்பில் மாரி ரூமுக்குள் நுழைந்து நோட்டம் விடுகிறாள். மறுபக்கம் விக்ரம் வர சூர்யா மாரியின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்ல விக்ரம் சாப்பாட்டில் பிரச்சனை இருந்து இருந்தால் அதை சாப்பிட்ட சூர்யாவுக்கும் பிரச்சனை வந்திருக்கணும் என்று சொல்லும் விக்ரம் புக்கை எடுத்து பரிசோதனை செய்ய அதில் விஷம் தடவப்பட்டு இருந்தது உறுதியாகிறது.


இதனை தொடர்ந்து இங்கே ஹாஸ்பிடலில் டாக்டர் உள்ளே வர மரியாவை பார்த்து யார் நீங்க புதுசா இருக்கீங்க என்று கேட்க மரியா புதுசா வந்திருக்கேன். இன்னும் பேட்ச் கொடுக்கவில்லை என்று சொல்லி சமாளித்து விடுகிறாள், அடுத்து அங்கு வந்த விக்ரம் புத்தகத்தில் தான் விஷம் தடவப்பட்டு இருந்தது என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


சூர்யா இதுக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டும், புத்தகத்தை மாற்றி வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல தாரா ஷாக் ஆகிறாள். பிறகு மாரியை வீட்டிற்கு அழைத்து வர, அங்கு ஸ்ரீஜாவை பார்க்க போலி ஸ்ரீஜா, தினேஷ் வந்திருக்க, மாரிக்கு அதை பார்த்ததும் சந்தேகம் அதிகமாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க 


CM Stalin: தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? சரமாரி கேள்வி கேட்கும் முதல்வர் ஸ்டாலின்!


2024 Festival List: 2024-ம் ஆண்டில் எந்தெந்த நாளில் என்னென்ன பண்டிகை? விழா நாட்களின் முழு பட்டியல் உள்ளே!


Magalir Urimai Thogai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு - வெளியான முக்கிய தகவல்