தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியஸ் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ரேவதிக்கு ஆபரேஷன் நடக்க தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஆபத்தில் இருந்து பிழைத்த ரேவதி:
அதாவது ரேவதிக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரேவதிக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்ல எல்லோரும் நிம்மதி அடைகின்றனர். அதே நேரத்தில் ரேவதி இன்னும் கண் விழிக்கவில்லை எனவும் சொல்கின்றனர்.
பிறகு கார்த்திக் ரேவதி பக்கத்தில் அமர்ந்து எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரேவதி என்று சொல்ல ரேவதி சந்தோஷத்தில் கண் திறக்கிறாள். என்னுடைய சவாலில் நான் ஜெயித்து விட்டேன் என்று சொல்கிறாள்.
ஷாக்கில் காளியம்மா, மாயா:
மறுபக்கம் மாயா வீட்டுக்கு வர காளியம்மா அந்த ரேவதி இன்னும் சாகல உயிரோட தான் இருக்கா என்று சொல்ல மாயா நான் என்னென்னமோ திட்டம் போட்டேன் ஆனா கார்த்தி எல்லாத்தையும் தவிடு பொடியாக்கிட்டான்.
பிறகு சிவனாண்டி முத்துவேல் ஆகியோர் கொஞ்ச நாளைக்கு கார்த்திக் கிட்ட உஷாரா தான் இருக்கணும். நம்ம மேல கொல காண்டில் இருப்பான் என்று சொல்லிக் கொள்கின்றனர். பிறகு அங்கு வந்த கார்த்திக் இருவரையும் அடி வெளுத்தெடுத்து அவர்களை வைத்து மாயாவை அங்கு வர வைத்து மாயாவை கைது செய்ய வைக்கிறான்.
நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?
பிறகு காளியம்மா சிவனாண்டி மற்றும் நீங்க எல்லாம் ஒரு ஆம்பளையா என்று திட்டுகிறாள். அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கு எதிராக மாற்ற வேண்டும் என்று திட்டம் போட்ட தொடங்குகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.