தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் கூட்டு சேர்ந்து மாரியை கடத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மோசமான ரேவதி உடல்நிலை:
அதாவது ரேவதியின் உடல்நிலை மேலும் மோசமடைய வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ரேவதி உடல்நிலை தேறி வரவேண்டும் என்பதற்காக ஆசிரமத்தில் உணவு கொடுக்க முடிவெடுக்கின்றனர்.
இதனை தொடர்ந்து மறுபக்கம் மாரியின் செல் போன் கீழே விழுந்து விட கார்த்திக் அந்த நம்பருக்கு போன் செய்ய அந்த வழியாக வந்த இரண்டு முருக பக்தர்கள் போனை எடுத்து பேசுகின்றனர். அதன் பிறகு அவர்கள் சொன்ன முகவரியை வைத்து கார்த்திக் அந்த இடத்திற்கு வருகிறான்.
சந்தோஷப்படும் சாமுண்டீஸ்வரி:
பிறகு பரமேஸ்வரி பாட்டி கோவிலில் ஏதாவது வேண்டிக் கொண்டு தீச்சட்டி ஏந்த முடிவெடுக்க துர்கா அக்காவுக்காக நானும் இருக்கிறேன் என்று தீச்சட்டி எடுக்க ரோகிணி ரேவதிக்காக நானும் எடுக்கிறேன் என்று கலந்து கொள்கிறாள். மறுபக்கம் ரேவதியின் உடல் நிலையை சிறு முன்னேற்றம் ஏற்பட அதை பார்த்து சாமுண்டீஸ்வரி சந்தோஷப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.