தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கச்சேரி நடக்கும் இடத்திற்கு கார்த்திக் கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது கார்த்திக் மேடையை கோகிலா வடிமைத்திருக்கும் விதத்தை பார்த்து பல்லவி பாட போகும் இடத்தை உறுதி செய்து கொள்கிறான், மறுபக்கம் கோகிலாவும் ரூபாஸ்ரீயும் காரில் வந்து கொண்டிருக்கும் போது இந்த முறை தீபா ரொம்ப குடைச்சல் குடுக்கிறா, இதெல்லாம் கார்த்தியின் ஏற்பாடுன்னு வேற பொய் சொல்றா என்று பேசி கொண்டு வருகிறாள்.






ரூபாஸ்ரீ தீபா வந்துடுவா தானே என்று கேட்க அதெல்லாம் கண்டிப்பாக வந்துடுவா என்று சொல்லி தீபாவுக்கு போன் போட அவள் அங்க தான் வந்துட்டு இருக்கேன் என்று சொல்ல இவர்கள் நிம்மதி அடைகின்றனர். அதன் பிறகு இளையராஜா கோகிலாவுக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க அவர்கள் வந்துகிட்டே இருக்கோம் என்று சொல்லி போனை வைக்கின்றனர்.


பிறகு இவர்கள் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து இறங்கியதும் கோகிலா எனக்கு ஜூஸ் வேண்டும் என்று கேட்க எல்லாமே உள்ளவே இருக்கு என்று சொல்லி அவளை அழைத்து செல்கின்றனர். கார்த்திக் அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் இந்த அம்மா வெளியே எங்கயும் போகாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வைக்கிறான்.


இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.