தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்த நிலையில், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நவீனை மண்டபத்திற்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

துர்காவை தலை மூழ்கிய சாமுண்டீஸ்வரி:

அதாவது, துர்கா நவீனுக்கு சப்போர்ட் செய்து பேசி அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடந்த விஷயத்தை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், சாமுண்டீஸ்வரி துர்காவை தலை மூழ்கி வெளியே அனுப்புகிறாள். 

சந்தோஷப்படும் காளியம்மாள்:

மறுபக்கம் முத்துவேல், சிவனாண்டி ஆகியோர் ஜெயிலுக்கு சென்று காளியம்மாவை சந்தித்து கல்யாணம் நின்று போன விஷயத்தை சொல்ல சந்தோசப்படுகிறாள். இது சாமுண்டீஸ்வரிக்கு ஏற்பட்ட தோல்வி தான். எனக்கு சந்தோசமாக இருக்கு என்று சொல்கிறாள். 

அடுத்து அந்த கான்ஸ்டபிள் கோமா ஸ்டேஜில் இருக்கும் விஷயத்தையும் சொல்ல காளியம்மா அவன் உயிரோடவே இருக்க கூடாது என்று சொல்கிறாள். கோவிலில் நவீன், துர்கா செல்ல இடமின்றி நின்று கொண்டிருக்கின்றனர். 

அடுத்து என்ன நடக்கும்?

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கோவிலுக்கு வரும் பரமேஸ்வரி பாட்டி எடுக்கும் முடிவு குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை இன்று காணலாம்.