தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.
பார்வையாளர்களை தினமும் விறுவிறுப்பான திருப்பங்களால் கவர்ந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் லட்சுமி அக்காவாக சுஜிதா வித்தியாசமான என்ட்ரி கொடுத்த நிலையில், இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
லட்சுமியின் புது ட்விஸ்ட் :
இந்துவிடம் நடந்ததை கேட்டறிந்த லட்சுமி அக்கா, “நாங்க கேஸை வாபஸ் வாங்கிடுறோம்” என்று அறிவிக்கிறாள். கர்ணா தரப்பில் உள்ளவர்கள் நிம்மதி அடைகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், லட்சுமி “ஒரு கண்டிஷன்” வைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள்.
20 லட்சம் நஷ்ட ஈடு :
லட்சுமி, “விமலாவுக்கு 20 லட்சம் நஷ்ட ஈடு தரணும். அவங்களுக்கு குழந்தையும் குடும்பமும் இருக்கு” என்று வலியுறுத்துகிறாள்.இதைக் கேட்டு கர்ணா தரப்பினர் அதிர்ச்சி அடைகிறார்கள். அதோடு, “சுட்டவன் மன்னிப்பு கேட்கணும்” என்று செக்மேட் வைக்கும் விதத்தில் லட்சுமி தனது நிபந்தனையை வைக்கிறார்.
கிருபா குடும்பத்தின் அதிர்ச்சி :
இந்த விஷயம் கிருபா குடும்பத்திற்கு சென்றடைய, தீனதயாளன் “பிரச்னையை முடிச்சிடுங்க” என்று சொல்கிறார். இதையடுத்து கிருபா மற்றும் திவாகர், ஹாஸ்பிடலுக்கே வந்து பணத்தை கொடுக்க முன்வருகிறார்கள். இந்து, “மன்னிப்பு கண்டிப்பா கேக்கணும்” என்று வற்புறுத்த, கர்ணா விமலாவிடம் மன்னிப்பு கேட்கிறான்.
கர்ணாவின் வீடு திரும்பல் :
பிறகு கர்ணா வீட்டிற்கு வர, சுகுணா அவனுக்கு நன்றி சொல்லுகிறாள். ஆனால் அதே நேரத்தில் திவாகர், கர்ணாவை பார்த்து முறைக்கிறான். இதனால் சூழ்நிலை மீண்டும் சிக்கலாகிறது.
இப்படியாக விறுவிறுப்பாக நகரும் சின்னஞ்சிறு கிளியே சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.