தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் இசை கோவிலில் இருக்க ரம்யாவிடம் இருந்து போன் கால் வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

காசிக்குப் போகத் தயாரான விஷால்:

அதாவது ரம்யா இசையை சந்திக்க வேண்டும் என்று போனில் சொல்ல இதை ஸ்ரீஜா ஒட்டு கேட்டு விடுகிறாள். இதைத்தொடர்ந்து மண்டபத்தில் ராகவ் மற்றும் விஷால் என இருவரும் காசி யாத்திரைக்கு செல்ல தயாராகின்றனர். காசி யாத்திரைக்கு செல்லும் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து மண்டபத்திற்கு அழைத்து வரும் சடங்குகள் நடக்கின்றன. 

மேலும் ஸ்ரீஜா இசைக்கு போன் செய்து உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னதால் இசை ரம்யாவை சந்திப்பதற்காக கிளம்பி செல்கிறாள். 

Continues below advertisement

உண்மையை உடைத்த ரம்யா:

இசையை சந்தித்த ரம்யா, ஸ்ரீஜா அவங்க அம்மாவின் மரணத்திற்கு காரணமான சுபத்ரா குடும்பத்தை பழி வாங்கத்தான் இங்கு வந்திருப்பதாக உண்மையை உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.