தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் காளியம்மா சந்திரகலாவை காப்பாற்றி விட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கார்த்திக்கை கூப்பிடும் ரேவதி:

அதாவது சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறாள். மேலும் அவளின் நாடகத்தை நம்பி அவள வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாது என முடிவெடுக்கிறாள். 

அடுத்ததாக ரேவதி பொங்கல் பானைகளை எடுத்து வைத்து தயாராகிக் கொண்டிருக்க கார்த்திக் அங்கு வருகிறான். ரேவதி அவனிடம் என் பிரண்டு ஒருத்திக்கு அப்பா அம்மா இல்ல, காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளும் உங்களை பார்த்தது கிடையாது. நம்ம கல்யாணத்துக்கும் வரல அதனால அவள போய் பார்த்துட்டு வரலாம் என்று சொல்கிறாள்.

Continues below advertisement

கார்த்திக், உங்க அம்மா உன்னை தேடுவாங்களே என்று சொல்ல அதெல்லாம் ரோகினி அக்கா பார்த்துப்பாங்க என்ற சொல்லி கார்த்தி்க்கை ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அந்த கிராமத்தில் இருக்கும் ரேவதியின் தோழி  மீனாட்சி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் கார்த்திக் ரேவதியை வரவேற்கின்றனர். 

சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சதி:

இங்கே சிவனாண்டி சந்திரகலாவுக்கு போன் செய்து, நல்லபடியா நாம மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து விட்டோம். ஆனால்,  இந்த பொங்கலுக்கு இந்த சாமுண்டீஸ்வரிக்கு ஏதாவது பெருசா பண்ணனும் என திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.