தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் விஷால் குடிபோதையில் இருந்த இசையை, வீட்டுக்கு தெரியாமல் ரூமுக்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி:

அதாவது, அடுத்த நாள் காலையில் சுபத்ரா ஸ்ரீஜா மற்றும் இசை என இருவருக்கும் தாலி பிரித்து போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறாள். 

ராகவன் வர்ஷினியை சந்திச்சு, நீ இதுக்கு எல்லாம் கவலைப்படாத இருவருக்கும் ஃபங்ஷன் தான், என்னைக்கு இருந்தாலும் நீ தான் என்னுடைய மனைவி என்று சொல்கிறான். மேலும் ஸ்ரீஜாவிடமும் வர்ஷினி தான் என் பொண்டாட்டி உன்ன என்னைக்கும் அந்த இடத்துல வச்சு பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறான். 

Continues below advertisement

குடிக்கப்போகும் விஷால்: இன்னொரு பக்கம் விஷால், நீ என்ன வேணா பண்ணிக்கோ என்னால இந்த பங்ஷன்ல  இருக்க முடியாது என்று சொல்லி குடிக்க கிளம்பி செல்கிறான். பங்ஷனின் போது விஷால் கோவிலுக்கு சென்று இருப்பதாக சொல்லி இசை சமாளிக்க,  சுபத்ரா அவன் இப்போ இங்க வந்தாகணும் என்று கட்டளை இடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.