தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கான்ஸ்டபிள் பேத்திக்கு வேலை தரும் கார்த்திக்:
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இறந்து போன கான்ஸ்டபிள் போன் என்ன சொல்லி உயிரை விட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கார்த்திக் கான்ஸ்டபிள் பேத்தியை சந்தித்து நீ எதற்கும் கவலைப்படாத மா.. சென்னைக்கு போய் அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனியில போய் பாரு.. உனக்கு இந்த வேலை போட்டு தருவாங்க என்று சொல்கிறான்.
பர்தா போட்ட பெண் யார்?
பிறகு அந்த பெண் தாத்தாவோட போனை பார்த்தீர்களா என்று கேட்க கார்த்திக் அந்த போனை தேட தொடங்குகிறான். அடுத்ததாக பரமேஸ்வரி பாட்டியை கைது செய்து ஜெயிலில் அடைத்து வைத்திருக்க கார்த்திக் சிசிடிவி ஆதாரங்களை பரிசோதனை செய்யும்போது பர்தா போட்ட பெண் கான்ஸ்டபிளை சுட்டுக்கொன்றது தெரிய வருகிறது.
பிறகு அந்தப் பெண் மாயா என்பது தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து கார்த்திக் மகேஷ் குறித்து தெரிந்த நர்ஸை மாயாவிடம் பேச வைத்து ஒரு இடத்திற்கு வரவைத்து மடக்கி பிடிக்கின்றனர். நீ தானே கான்ஸ்டபிள் கொன்ன என்று கேட்க மாயா இல்லை என்று மறுக்க வீடியோ ஆதாரத்தைக் காட்டி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
அடுத்து என்ன நடக்கும்?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.