Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் ரேவதியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட திட்டமிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


ராஜேஸ்வரியிடம் உண்மையைச் சொன்ன கார்த்தி:


அதாவது ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து நீ கார்த்திக், பிசினஸ் மேன் தானே என்று விசாரிக்க கார்த்திக் ஆமாம் நீங்க ராஜேஸ்வரி தானே.. உங்களை எனக்கு தெரியும் என்று சொல்கிறான். 


மேலும் எதுக்காக நான் இங்க வந்திருக்கேன் என்பதையும் சொல்றேன், அப்போது தான் ஒரு நல்ல விஷயத்திற்காக தான் வந்திருக்கேன் என்பது உங்களுக்கு புரியும் என சொல்கிறான். கடைசியில் இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க தான் வந்திருக்கான் என்பதை அறியும் ராஜேஸ்வரி நான் உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்கிறாள். 


மகேஷிற்கு அரிப்பு:


அடுத்ததாக மயில்வாகனம் பாட்டி சொன்ன இலையை பறித்து வந்து கோட்டில் தேய்த்து அதை கொண்டு போய் மகேஷிடம் கொடுத்து சாமுண்டீஸ்வரி போட்டு கொள்ள சொன்னதாக சொல்லி போட வைக்கிறான். 


நடனம் ஆட வந்த சாமுண்டீஸ்வரி:


பிறகு ரேவதி மற்றும் மகேஷ் என இருவரும் மேடை ஏறி டான்ஸ் ஆட தொடங்க மகேஷ்க்கு அரிப்பு ஏற்பட்டு நடனத்தில் சொதப்புகிறான். பிறகு ஸ்வாதி டான்ஸ் ஆடுகிறாள். அடுத்து மயில் வாகனம் மற்றும் ரோகிணி ஆடுகின்றனர். இதையடுத்து எல்லாரும் சேர்ந்து நடனமாட சாமுண்டீஸ்வரி அங்கு வர அனைவரும் ஷாக் ஆகின்றனர். 


யாரும் எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரியும் அவர்களுடன் சேர்ந்து நடனமாட எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.