தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 


ஸ்வாதிக்கு குவியும் பாராட்டு:


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மஹேஷ்க்கு பதிலாக பாட்டி கையால் துணி வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது ஸ்வாதி மேடை ஏறி நல்லபடியாக பாடி முடிக்க ரேவதி உட்பட எல்லாரும் அதை பார்த்து சந்தோசப்பட்டு அவளை பாராட்டுகின்றனர். 


பூர்ணிமா பாக்யராஜ்:


இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் தோழியாக ராஜேஸ்வரி என்ற பெயரில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்ட்ரி கொடுக்கிறார். தனது குடும்பத்தை தோழிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் சாமுண்டீஸ்வரி. 


அப்போது கார்த்தியை ட்ரைவர் என அறிமுகம் செய்து வைக்க ராஜேஸ்வரிக்கு இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்க ஒரு மீட்டிங்கில் கார்த்தியுடன் பங்கேற்ற விஷயம் நினைவுக்கு வருகிறது. 


உண்மையை உடைக்கப் போகும் ராஜேஸ்வரி:


தனது பி.ஏ-விடம் விசாரிக்க அவனும் கார்த்திக் ஒரு பிசினஸ் மேன் என்ற உண்மையை சொல்ல ராஜேஸ்வரி இவன் ஏன் இங்க இருக்கான்? சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்லணும் என முடிவெடுக்கிறாள். 


இதையடுத்து மகேஷ் ரேவதியிடம் சேர்ந்து நடனமாட போவதாக மாயாவிடம் சொல்ல இது பரமேஸ்வரி பாட்டிக்கு தெரிய வருகிறது. பாட்டி இதை தடுக்க ஒரு இலையை பறித்து வந்து மகேஷ் சட்டையில் தேய்க்க சொல்கிறார். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.