தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றாக இருப்பது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் முக்கியமானது கார்த்திகை தீபம். திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி தனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


காயம்பட்டு கிடக்கும் சிவனாண்டி:


அதாவது சாமுண்டீஸ்வரி கதையை சொல்லி முடித்ததும் ராஜராஜன், "என் அப்பா அம்மாவால் சாமுண்டீஸ்வரிக்கு இப்படி நடந்ததால் அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று சொல்லி அவளுடன் வந்து விட்டேன்" என்று சொல்கிறார். 


மொத்த கதையையும் கேட்ட கார்த்திக், "நான் போய் அந்த சிவனாண்டிக்கு சவால் விட போறேன்" என்று கிளம்பி வருகிறான். இங்கே கார்த்தியிடம் அடி வாங்கிய சிவனாண்டி முடியாமல் படுத்திருக்க, சந்திரகலா அவனுக்கு ஒத்தடம் கொடுத்தபடி இருக்கிறாள். 


சவால் விட்ட கார்த்தி:


இந்த சமயத்தில் கார்த்திக் வந்து கதவை தட்ட, கடைசி நொடியில் சந்திரகலா ஓடி ஒளிந்து கொள்கிறாள். "இதுவரைக்கும் நீ அந்த குடும்பத்துக்கு குடைச்சல் கொடுத்த.. இனிமே அந்த குடும்பத்துக்கு நான் இருக்கேன்.. என்னை மீறி உன்னால் ஒன்னும் செய்ய முடியாது" சவால் விடுகிறான். 


அடுத்து கார்த்திக் சிவனாண்டியிடம் சவால் விடுவதை கேட்ட மயில் வாகனம் வீட்டிற்கு வந்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கார்த்திக் விட்ட சவாலை நேரில் பார்த்ததாகவும் கார்த்திக் மாஸாக பேசியதாகவும் சொல்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.