தமிழில் உள்ள தொலைக்காட்சிகளில் மிகவும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் முக்கியமான தொடர் கார்த்திகை தீபம். 


இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் தனது குடும்பம் குறித்த ஃபிளாஷ்பேக் கதையை சொல்லி வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


சிவகாமி தற்கொலை:


அதாவது, கோவிலில் நகை காணாமல் போக அந்த நகையை தேடும் போது சிவகாமி வீட்டின் வாசலில் ஒரு நகை கிடைக்கிறது. இதனால் ராஜா சேதுபதி சிவகாமி தான் நகை திருடியதாக தவறாக புரிந்து கொள்கிறார்.  சிவகாமியை பார்த்து உனக்கு வேலை போட்டு கொடுத்து வீட்டில் தங்க வைத்தால் இப்படி பண்ணிட்டியேமா? என்று கேட்க அவமானம் தாங்காத சிவகாமி வீட்டுக்குள் ஓடிப்போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.


அதன் பிறகு "அங்க தனி மரமாக நின்னுட்டோம்.. நீயே சொல்லு குடும்பத்துல இப்படி நடந்தா எப்படி இருக்கும்?" என சாமுண்டீஸ்வரி கார்த்தியை பார்த்து கேள்வி கேட்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


இந்த நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை இன்றைய எபிசோடில் விரிவாக காணலாம்.