karthigai deepam serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி தன்னையே சுட்டு கொள்வேன் என்று மிரட்டி ரேவதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


கண்டிஷன் போடும் ரேவதி:


அதாவது, ரேவதி சாமுண்டீஸ்வரியால் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். ஆனாலும் நான் விரும்பி இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கல என்று வருத்தத்தை பதிவு செய்கிறாள். 


மறுபக்கம் ராஜேஷ்வரி கார்த்தியிடம் பேசி அவனையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள். பரமேஸ்வரி பாட்டியிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் கார்த்திக் திருமணத்திற்கு முன்னாடி ரேவதியிடம் பேச வேண்டும் என கண்டிஷன் போடுகிறான். 


கார்த்தியை கண்டுகொள்ளாத ரேவதி:


அடுத்து ரேவதியை சந்திக்கும் கார்த்திக் தீபாவுடனான வாழ்க்கை குறித்து சொல்கிறான். மேலும் முழு மனசோடு இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனவும் சொல்கிறான். ஆனால் ரேவதி அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறான். 


இதையடுத்து ரேவதி தனது தோழிகளுடன் ட்ரைவர் ராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி மணமேடை ஏறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.