shruti narayanan சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இவர் ஆடிஷன் வீடியோ என்ற பெயரில் இவரது ஆபாச வீடியோ கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனை சந்தித்த ஸ்ருதி நாராயணன்:
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்தது குறித்து நடிகை ஸ்ருதி நாராயணன் பேசியது குறித்து கீழே காணலாம்.
எனக்கு சிவகார்த்திகேயன் அண்ணாவை ரொம்ப பிடிக்கும். . எனக்கு ஞாபகம் இருந்ததுல இருந்து என்னோட இன்ஸ்பிரேஷன் அவருதான். அப்போ அந்த ரெமோ ஃபீவர். அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ரெமோ படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் துபாய் வந்திருந்தாரு. நான் ஸ்கூல் துபாய்லதான் படிச்சேன். அப்போ அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது.
கேட்க வேண்டும்:
அவரை பாத்து என்ன பேசுனேனு எனக்கு ஞாபகம் இல்ல. 10, 12 வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் அது. ஆனா, அவருகிட்ட நிறைய பேசுனேன். அப்பவும் ஜெம் பெர்சனா இருந்தாரு. இப்பவும் அப்படித்தான் இருக்காரு. இப்ப அவரை பாத்தா அண்ணா என்ன ஞாபகம் இருக்கானு கேப்பேன். அவரோட சினிமா பயணம் பற்றி, அவர் எப்படி எல்லாம் கஷ்டத்தை கடந்து வந்தாருனு அவரு வாயால கேக்கனும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகார்த்திகேயனின் வெற்றிப் படங்களில் முக்கியமான படமாக ரெமோ உள்ளது. முழுக்க முழுக்க காதல் காமெடி படமான இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு ரிலீசானது. தற்போது 24 வயதான ஸ்ருதி நாராயணன் தன்னுடைய 15 வயதில் சிவகார்த்திகேயனை துபாயில் நேரில் சந்தித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயனை ஒரு முறை நேரில் பேட்டி எடுக்க வேண்டும் என்பதும் ஸ்ருதி நாராயணனின் விருப்பம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த ஸ்ருதி நாராயணன் தனது பள்ளிப்படிப்பை துபாயில் முடித்துள்ளார். சென்னையில் விஸ்காம் பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி யூ டியூப் தொலைக்காட்சி, விளம்பரங்களில் நடித்த ஸ்ருதி நாராயணன் தற்போது சிறகடிக்க ஆசையில் நடித்து வருகிறார். மேலும், கார்த்திகை தீபம், மாரி, சமந்தாவின் சிட்டாடல் வெப்சீரிஸிலும் அவர் நடித்துள்ளார்.