தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி மற்றும் மகேஷ்க்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கார்த்திக்கை ஆதரிக்கும் ரேவதி:


அதாவது, எல்லாரும் கார்த்தியை பற்றி தப்பாக பேச ரேவதி கார்த்திக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள், பிறகு மண்டபத்தில் இருந்து எல்லாரும் கிளம்பி செல்கின்றனர். மாயா மற்றும் மகேஷ் தங்களது வீட்டில் இருக்கும் போது அப்போது கார்த்திக் அங்கு வர இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் "எதுக்காக இப்படி மாத்தி சொன்னீங்க" என்று கேட்க, சிவனாண்டி தான் எங்களை மிரட்டி இப்படி சொல்ல சொன்னதாக சொல்கின்றனர். 


இதை கேட்ட கார்த்திக் "சரி.. இதை நான் பார்த்துக்கறேன்" என்று சொல்லி கிளம்பி வர, மாயா சிவனாண்டிக்கு போன் செய்து கார்த்திக் வந்து விசாரித்து விட்டு போனதாக போட்டு கொடுக்கிறாள். அடுத்து கார்த்திக்கு மண்டபத்தில் இருந்து போன் கால் வருகிறது. 

என் நிலைமை உனக்கே தெரியும்:


அந்த போன் காலில் சில பொருட்களை மண்டபத்தில் மறந்து விட்டு சென்றதாக சொல்ல, கார்த்திக் அதை எடுத்து வர மண்டபத்திற்கு வருகிறான், அங்கே மாயா கட்டி இருந்த பச்சை கலர் பட்டு புடவையும் இருக்கிறது.  கார்த்திக் இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்ததும், மயில் வாகனம் ரூமுக்குள் வந்து "நீ இந்த மாதிரி பண்ணி இருக்க மாட்டேன்னு எனக்கும் தெரியும்.. ஆனால் அதை நான் சொல்ல முடியாது. இந்த வீட்டில் என்னுடைய நிலைமை என்னனு உனக்கே தெரியும், என்னை மன்னிச்சுரு" என்று சொல்கிறான். 


பிறகு கார்த்திக் மண்டபத்தில் இந்த புடவை இருந்ததாக சொல்ல, மயில் வாகனம் மாயா தான் இந்த புடவையை கட்டி இருந்ததாக சொல்ல கார்த்திக்கு சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.