தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் வைத்த குற்றச்சாட்டால் கார்த்திக் தன் மீது எந்த தவறும் இல்லை என நிரூபிக்க அவகாசம் கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மகேஷ் - ரேவதி நிச்சயதார்த்தம்:
அதாவது, சாமுண்டீஸ்வரி கார்த்திக்கு 1 மாதம் அவகாசம் கொடுக்கிறார். இந்த ஒரு மாதத்தில் உண்மையை நிரூபிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்கிறாள். இதையடுத்து திட்டமிட்டபடி மகேஷ் மற்றும் ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியாகும் பரமேஸ்வரி பாட்டி என்ன முருகா "கார்த்திக்கும், ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு சொன்ன.. ஆனால் இப்போ இப்படி நடக்குது?" என்று கேட்க முருகன் "கவலைப்படாத பாட்டி.. இப்போ நடந்ததையெல்லாம் பெருசா எடுத்துக்காத. நீ வேடிக்கை மட்டும் பாரு" என்று சொல்கிறான்.
சிவனாண்டி திட்டத்தால் சந்தோஷப்படும் சந்திரகலா:
மறுபக்கம் சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து, "எதுக்கு இவங்களுக்கு நிச்சயம் நடக்கவிட்டீங்க" என்று கேட்க, "சிவனாண்டி இப்போ மகேஷ் ரேவதி கழுத்தில் தாலி கட்டுவது தான் சரியா இருக்கும். அப்படி நடந்தா அந்த ரேவதி வாழ்க்கை நாசமாக போய்டும்" என்று தனது திட்டத்தை சொல்ல சந்திரகலா அதை கேட்டு சந்தோசப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.