Karthigai Deepam Serial: ரேவதியை மிரட்டும் சாமுண்டீஸ்வரி! மனம் மாறுவாரா கார்த்திக்?

Karthigai Deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதிக்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் இன்று நடக்குமா? என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி, டிரைவர் ராஜா தான் மாப்பிள்ளை என அறிவிக்க ரேவதி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கார்த்தியை சம்மதிக்க வைக்க முயற்சி:

அதாவது ரேவதி ராஜாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுக்கிறாள். சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் பேசி சம்மதிக்க முயற்சி செய்கிறாள். அதே போல் மறுபக்கம் ராஜராஜன், பரமேஸ்வரி பாட்டி மற்றும் மயில்வாகனம் ஆகியோர் கார்த்தியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் கார்த்தி இது சரியாக வராது என்று சொல்கிறான். பாட்டி எல்லாம் சரியாக வரும். 

இரண்டு குடும்பம் ஒன்னு சேருமா?

உனக்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடந்துட்டா சாமுண்டீஸ்வரி நம்ம குடும்பத்தை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் என்று சொல்கிறார். அடுத்தாக ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து சென்று இரண்டு குடும்பத்தையும் ஒன்னு சேர்க்க இந்த கல்யாணம் நடக்கணும் என பேச்சு வாரத்தை நடத்துகிறார். 

இங்கே சாமுண்டீஸ்வரி ரேவதி திருமணத்திற்கு சம்மதம் சொல்லாததால், துப்பாக்கியை எடுத்து நீட்ட ரேவதி என்ன கொன்னுடுவீங்களா? சுடுங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி உன்னை சுட மாட்டேன். என்னையே சுட்டுக்குவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். 

ரேவதி இதெல்லாம் ரொம்ப தப்பு என்று சொல்கிறாள். ஆனாலும் சாமுண்டீஸ்வரி உறுதியாக இருக்க ரேவதி வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Continues below advertisement