தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி விஷத்தை குடிக்க கார்த்திக் அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கை தடுக்கும் சாமுண்டீஸ்வரி:
அதாவது, ரேவதியின் இந்த நிலைமைக்கு காரணம் சாமுண்டீஸ்வரி தான் என ரோகினி, மயில் வாகனம், ராஜராஜன் என எல்லாரும் கோபப்படுகின்றனர். இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி ரேவதியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வரும் கார்த்திக், பரமேஸ்வரி பாட்டி மீது கோபப்படுகிறாள். ரேவதியை பார்க்க விடாமல் தடுக்கிறாள். முதலில் டாக்டர் ரேவதி கிரிட்டிக்கலான நிலையில் இருப்பதாக சொல்ல எல்லாரும் பதறுகின்றனர்.
கடவுளிடம் வேண்டும் கார்த்திக்:
பிறகு கார்த்திக் கோவிலுக்கு சென்று கடவுளிடம் பிராத்தனை செய்கிறான். தீவிர சிகிச்சைக்கு பிறகு ரேவதி கண்விழிக்க டாக்டர் ரேவதி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக சொல்கிறார். இதனால் எல்லாரும் நிம்மதி அடைகின்றனர்.
கார்த்திக் ரேவதியை பார்க்க வேண்டும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? சாமுண்டீஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.