இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரசிகர்களின் பேவரிட் சீரியல் கார்த்திகை தீபம், இன்று உணர்ச்சிகளும் பரபரப்பும் கலந்த காட்சிகளுடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்க உள்ளது. 

Continues below advertisement

கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி:

நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், இன்று அவர்களின் வருகை பல புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கிறது. வீட்டில் கடும் ஆத்திரத்தில் சாமுண்டீஸ்வரி கொந்தளிக்கிறாள். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து உடைத்து ஆவேசப்படுகிறாள். 

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தாலும், சாமுண்டீஸ்வரியின் கோபம் மட்டும் குறையவே இல்லை.

Continues below advertisement

ஆரத்தி எடுத்த பரமேஸ்வரி:

மறுபக்கம், கார்த்திக் மற்றும் ரேவதி ஜோடியாக பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் பரமேஸ்வரி ஆரத்தி எடுத்து அன்புடன் வீட்டிற்குள் வரவேற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், ரேவதியை நேராக பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொல்கிறார். ரேவதியும் பக்தியுடன் விளக்கேற்றி அனைவரின் மனதையும் கவர்கிறாள்.

இந்த நிகழ்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சாமுண்டீஸ்வரி இன்னும் கோபத்தின் உச்சத்திலேயே இருக்கிறாள். அப்போது மயில்வாகனம் மற்றும் ரோகினி இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வந்து கார்த்திக், ரேவதியை சந்திக்கின்றனர். இதனால் அங்கு புதிய பேச்சுகளும் எதிர்பாராத சம்பவங்களும் அரங்கேறப் போகும் சூழல் உருவாகிறது.

அடுத்து நடக்கப்போவது என்ன?

சாமுண்டீஸ்வரியின் கோபம் அடுத்து என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? பரமேஸ்வரி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு என்ன காத்திருக்கிறது? மயில்வாகனம் மற்றும் ரோகினியின் வருகை எந்த புதிய திருப்பத்தை உருவாக்கும்? என்ற பல கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்ள, இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலை தவறாமல் காணுங்கள்!