karthigai deepam serial: தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு மாப்பிள்ளை ஆக நவீனை அழைத்து வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்திரகலாவிற்கு சிவனாண்டி தரும் ஆலோசனை:

அதாவது, சந்திரகலா சிவனாண்டியிடம் மகேஷ் மாயா உறவு குறித்து சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்து விட்டது என்ற விசயத்தை சொல்ல சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை கடத்தி விடுவதாக சொல்கிறான். 

அம்மா இல்லாமல் ரேவதி எப்படி கல்யாணம் பண்ணிப்பா? என்று கேட்க,  நீ சொன்னா அவ கண்டிப்பா கேட்பாள். அவளை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு என சந்திரகலாவிடம் சொல்கிறான். 

ஷாக்கில் ரேவதி:

இதையடுத்து கார்த்திக் ரேவதிக்கு நவீனை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்து, இவன் தான் நவீன் என்னுடைய நண்பன் என ரேவதியிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். 

அதன் பிறகு மாயா ரேவதியை சந்தித்து நாங்கள் கிளம்புறோம், இந்த கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். ஏன் இப்படி சொல்றீங்க? என்று காரணம் கேட்க, டிரைவர் ராஜா எனக்கும் மகேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சொல்கிறான்.

இதையெல்லாம் எங்களால தாங்கிக்க முடியாது. சொல்லாமல் கிளம்பிடலாம் என்று தான் முடிவு எடுத்தோம். ஆனால் உன் கிட்ட சொல்லாம போனா தப்பா போயிடும் என்று மாயா பாவமாக பேசி ரேவதியை நம்ப வைக்கிறாள்.

மாயாவை சமாதானம் செய்யும் ரேவதி:

ரேவதி அப்படி எதுவும் நடக்காது, நீங்க எங்கேயும் போக வேண்டாம் என மாயாவை சமாதானம் செய்கிறாள். மறுபக்கம் கார்த்திக் மாயாவிற்கு அபார்ஷன் நடந்த போது அவளுடன் இருந்த நர்ஸை தேடி செல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.