karthigai deepam serial: தமிழில் ஒளிபரப்பாகும் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
மகேஷை ஓடிப்போக அழைக்கும் மாயா:
இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரியும் என மாயாவுக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மாயா வேக வேகமாக ரூமுக்கு ஓடி வந்து மகேஷிடம் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு வா நம்ப கிளம்பி போயிடலாம் என்று கூப்பிடுகிறாள்.
சாமுண்டீஸ்வரியை கடத்த ப்ளான்:
இந்த சமயத்தில் உள்ளே வரும் சந்திரகலா இவர்களை தடுத்து நிறுத்தி சிவனாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவன் சாமுண்டீஸ்வரியை தூக்கிடலாம்.. நான் அவளை கடத்திடுறேன் என்று சொல்கிறான். ரேவதி அம்மா இல்லாம எப்படி கல்யாணம் பண்ணிப்பா என்று கேள்வி கேட்க எல்லாம் சரியாக வரும் என சொல்கிறான்.
மறுபக்கம் கார்த்திக் ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் டாக்டர் உண்மையை சொல்ல மறுத்து விட்டதால், மாயாவுக்கு அபார்ஷன் செய்யும் போது அவளுடன் இருந்த நர்ஸை அழைத்து வந்து உண்மையை சொல்ல வைக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.
கல்யாணத்திற்கு நோ சொல்லும் கார்த்திக்:
ராஜராஜன் ரேவதியை நீயே கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல கார்த்திக் எனக்கு அதில் விருப்பமில்லை என சொல்கிறான். அது மட்டுமல்லாமல் அதற்கு நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன் என தன்னுடைய நண்பன் நவீனை அழைத்து வந்து அறிமுகம் செய்கிறான்.
நவீன் ஒரு பெரிய பிசினஸ்மேன் பெங்களூரில் பிசினஸ் செய்வதாகவும் ரேவதிக்கு சரியான ஜோடியாக இருப்பான் எனவும் சொல்கிறான். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.