நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி 


இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரியளவில் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே 2000 முதல் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் கான் பனேகா கரோர்பதி. தமிழில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சூர்யா , பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். சாமானியர்கள் முதல் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வரை இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கிறார்கள். 


தொகுத்து வழங்குவாரா தோனி ?


இந்தியில் பல வருடங்களாக இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். வரும் ஜூலை மாதத்தோடு இந்த நிகழ்ச்சி 25 ஆம் ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க முடியாது என முன்பே தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக இன்னொருவர் தேர்வு செய்யப்படாததால் வேறு வழியில்லாமல் அமிதாப் பச்சன் இந்த ஒரு வருடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்தார். 


அடுத்த அண்டு இந்த நிகழ்ச்சியை வேறு ஒருவர் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் யார் அடுத்த சீசனை தொகுத்து வழங்க பொருத்தமாக இருப்பார் என இந்தியன் இண்ஸ்டிட்யூட் ஆப் ஹ்யூமன் பிராண்ட்ஸ் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. ஷாருக் கான் , ஐஸ்வர்யா ராய் , தோனி. ஹர்ஷா போக்லே , அனில் கபூர் ஆகியோரில் மக்கள் யார் தேர்வு செய்வார்கள் 768 பேரிடம் இந்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது. 


இதில்  ஷாருக் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என 63 சதவீதம் வாக்களித்துள்ளார்கள். 


அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு 51 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 


மூன்றாவதாக மகேந்திர சிங் தோனிக்கு 37 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 


ஹர்ஷா போக்லே 32 சதவீதமும் அனில் கபூர் 15 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.


இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியோடு தோனி முழுவதுமாக கிரிக்கெட் விளையாட்டிற்கு குட் பை சொல்ல இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை மகேந்திர சிங் தோனி தொகுத்து வழங்குவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளதைப் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.