தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் ரேவதியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காதலர் கொண்டாட்டம்:

அதாவது ரேவதியின் கண்ணை கட்டி அழைத்துச் சென்று கார்த்திக் சப்ரைஸ் கொடுப்பதோடு அவளுக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்த ரேவதி அனைத்தையும் நினைத்து சந்தோஷப்படுகிறாள். 

அதன் பிறகு இருவரும் சேர்ந்து காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். பிறகு இருவரும் ரெஸ்டாரன்ட் சென்று அன்பை பரிமாறிக் கொண்டு சாப்பிடுகின்றனர். 

தவிக்கும் ஜாக்:

கார்த்திக் ரேவதி என இருவரும் சிறப்பாக காதலர் தினத்தை கொண்டாட வீட்டில் ஜாக் ரேவதியுடன் காதலர் தினத்தை கொண்டாட முடியாமல் தவிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.