தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் தீபாவுக்காக நகை வாங்கி வந்து கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபா ரூமுக்குள் அப்பா வாங்கி கொடுத்த நகைகளை எடுத்து பார்த்து கண் கலங்க கார்த்திக் உங்க அப்பா வாங்கி கொடுத்தது தானே, சந்தோஷமா போட்டுக்கங்க என்று சொல்கிறான்.
தீபா எப்படி சார் இதை நான் சந்தோஷமா போட்டுக்க முடியும்? அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்ல, அப்படி இருக்கும் போது நிச்சயமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கி தான் வாங்கி இருப்பாரு என வருந்துகிறாள். கார்த்திக் அந்த கடனை அடைக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனால் உங்க அப்பா அந்த பணத்தை வாங்கிக்க மாட்டாரு. ஆனால் நீங்க பாடி சம்பாதித்து பணத்தை கொடுத்தா கண்டிப்பா வாங்கிக்குவாரு, ஏனெனில் அது பொண்ணு சம்பாதித்து கொடுத்தது என்ற சந்தோஷம் இருக்கும் என சொல்கிறான்.
மிரட்டும் மைதிலி
இதையடுத்து தர்மலிங்கம் வீட்டுக்கு வரும் இருவர் தீபா குறித்து பேப்பரில் வந்த விஷயத்தை சொல்லி அவமானப்படுத்தி பேச அது பொய்யான செய்தி என சொல்கிறார். மைதிலி போறீங்களா போலீஸை கூப்பிடுவா என அவர்களை துரத்தி விடுகிறாள். இந்த ஆட்களை ஏற்பாடு செய்த கோகிலா தூரத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்து ரசித்து தர்மலிங்கம் இனிமே தீபாவை பாட விட மாட்டாரு என கணக்கு போடுகிறாள்.
ஷாக் கொடுக்கும் கார்த்திக்
மறுபக்கம் கார்த்திக் நியூஸ் பேப்பரில் வந்த போட்டோ நம்ம வீட்டு வெளியே எடுத்தது தான். அப்படின்னா நம்ம வீட்டில் யாரோ தான் இந்த செய்தியை கொடுத்திருக்கணும் என்று சொல்ல ராஜேஸ்வரி என்ன கார்த்திக் வீட்ல இருக்காங்களை சந்தேகப்படுறியா? என கேட்க கார்த்திக் சந்தேகம் இல்லை, யார் பண்ணி இருப்பாங்கனு உறுதியாக தெரியும் என ஷாக் கொடுக்கிறான்.
இப்படியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.