Ethirneechal: பக்காவாக டிராமா போடும் குணசேகரன்: போலீசிடம் இருந்து மீண்டும் தப்பிக்கும் ஜீவானந்தம் - எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal: தர்ஷினியைக் காப்பாற்றி ஜீவானந்தம் அழைத்துச் செல்ல போலீஸ் அவர்களை ரவுண்டு அப் செய்கிறது. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச்.07) எபிசோடில் ஜீவானந்தம் தர்ஷினியைக் காப்பாற்றி தூக்கிக் கொண்டு போறதை போலீஸ் தப்பாக நினைத்து அவளை கடத்திக்கொண்டு போறதாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார் ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவை. ஜீவானந்தத்தைப் பார்த்ததும் சுடுவதற்கு மேல் அதிகாரியிடம் ஆர்டர் வாங்குகிறார் கொன்றவை.

Continues below advertisement


அஞ்சனா சக்திக்கு போன் செய்து நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி ஜனனி இப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது பற்றி சொல்லி உடனடியாக வர சொல்கிறாள். அதற்குள் குணசேகரன் அங்கே வந்து வீர சங்கிலியை மிரட்டுவது போல டிராமா போடுகிறார். ஜனனி தான் அனைத்திற்கும் காரணம் என அவளை பயங்கரமாக திட்டுகிறார். அனைத்து வேலைகளையும் குணசேகரன் செய்து விட்டு அப்படியே ஒன்றுமே தெரியாதது போல பாசாங்கு செய்கிறார். இன்ஸ்பெக்டர் குணசேகரனிடன் ஜீவானந்தம் தர்ஷினியை தூக்கிச்செல்லும் வீடியோவை காட்டவும் மயக்கம் போட்டு விழுவது போல நடிக்கிறார்.

நந்தினிக்கு கதிர் வட்டிக்கு பணம் வாங்கி செயின் வாங்கி வந்து கொடுக்கிறான். அதைப் பற்றி நந்தினி கேட்டுக்கொண்டே இருக்க அதற்குள் ஞானமும் ரேணுகாவும் வந்து "எங்ககிட்ட பணம் வாங்க மாட்ட ஆனா வட்டிக்கு மட்டும் பணம் வாங்கி பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்புவீங்க" என எதையெதையோ தப்புத் தப்பாக புரிந்து கொண்டு மனது வேதனைப்பட்டு அழுகிறாள். இவை அனைத்தையும் விசாலாட்சி அம்மாவும் ஆச்சியும் கீழே இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கரிகாலன் வந்து கதிர் மற்றும் ஞானத்திற்கு அட்வைஸ் செய்கிறான். "அவங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினை என உங்களுக்கு புரியுதா இல்லையா? அவர்களுக்குள் இருக்குற பிரச்சினையை சரி செய்யாமல் நீங்க இரண்டு பேரும் ஊதி பெருசாக்குறீங்க. நல்ல பொண்டாட்டி கிடைப்பது எல்லாம் வரம். புரிஞ்சு நடந்துக்கங்க" என சொல்கிறான்.

"இந்த வீட்டு மருமகள்கள் ஏதோ பிளான் பண்ணி தான் இப்படி பண்ணறாங்க. புருஷன்களை சொந்தக் காலில் நிற்க வைக்க தான் இப்படி செய்றாளுங்க. இந்த வேஷம் சீக்கிரம் களைந்துவிடும்" என விசாலாட்சி அம்மா சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் ஜனனி இன்ஸ்பெக்டரிடம் அவளுடைய போனை கேட்கிறாள். "இந்த ரவுடிகளை நல்லா அடிச்சு கேளுங்க" என சொல்ல, "அவன் தான் உண்மையை ஒத்துக்கிட்டானே பிறகு என் அடிக்கணும்?" என இன்ஸ்பெக்டர் சொல்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 
சக்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விடுகிறான். குணசேகரன் சக்தியை பார்த்ததும் "எனக்கு எவ்வளவு கோவம் இருந்தாலும் இவ என்னோட தம்பி பொண்டாட்டி. விட்டுத் தொலைங்க" என போலீசிடம் சொல்கிறார் குணசேகரன்.

 



ஜீவானந்தம் தர்ஷினியை அழைத்துக் கொண்டு காரில் வருகிறார். அப்போது அந்த இடத்தில் போலீஸ் வரும் வண்டிகளை எல்லாம் சோதனை செய்கிறார்கள். அதைப் பார்த்த ஜீவானந்தம் தயங்குகிறார். தர்ஷினியை முதலில் கடத்தி வைத்திருந்த ரவுடி ஒருவன் இவர்களை பார்த்து விடுகிறான்.

வீரசங்கிலி அந்த ரவுடியிடம் போனில் பேசுகிறான். "அந்த தர்ஷினி பொண்ணை கடத்த சொன்னதே அவங்க அப்பன் குணசேகரன் தான். இப்போ அவங்க இரண்டு போரையும் போட்டன்னு வை நாம போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சுடலாம்" என்கிறான்.

 


ஜீவனானந்தம் தர்ஷினியிடம் போலீஸ் இருப்பது பற்றி சொல்கிறார். போன் செய்து அவரை தப்பிக்க உதவிய கான்ஸ்டபிளிடம் பேசுகிறார். "அந்தப் பொண்ணு உங்ககிட்ட இருக்க வரைக்கும் தான் சார் பாதுகாப்பு. பாத்து ஜாக்கிரதையா இருங்க" என அவர் சொல்ல, ஜீவானந்தம் காரை வேகமாக வேறு பக்கமாக போக சொல்கிறார். அவர்கள் தப்பித்து செல்வதை போலீஸ் டீம் பார்த்து அவர்களை பின் தொடர்ந்து செல்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola