ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் சாமுண்டீஸ்வரியை கொல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சாமுண்டீஸ்வரியை கொல்ல சந்திரகலா ஏற்பாடு:

அதாவது, சாமுண்டீஸ்வரி காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. கார்த்திக்கும், மயில்வாகனமும் அங்கு வந்து என்னாச்சு என்று விசாரிக்கின்றனர்.  இதற்கிடையில் தொழிலாளர் ஒருவருக்கு கரண்ட் ஷாக் அடித்து விட்டதாக தகவல் வர கார்த்தியும் மயில்வாகனமும் கிளம்பி செல்கின்றனர். 

அதற்குள் சந்திரகலா இங்கே சாமுண்டீஸ்வரி கொல்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள். அடுத்து கார்த்திக் அந்த தொழிலாளி யாரோ வேண்டுமென்றே கரண்ட் ஷாக் அடிப்பது போல் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறான். 

ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்:

உடனே கார்த்திக் ரேவதி, சாமுண்டீஸ்வரி, துர்கா, ரோஹினி என அனைவருக்கும் போன் போட்டு உஷாராக இருக்க சொல்லி எச்சரிக்க முயற்சி செய்ய போன் ரீச் ஆகாமல் போய் விடுகிறது. பிறகு இங்கே ரேவதி ஸ்விட்ச் போட போகும் சமயத்தில் கார்த்திக் அங்கு வந்து தடுத்து நிறுத்துகிறான். இதன் மூலம் ரேவதியின் உயிரை காப்பாற்றுகிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? சாமுண்டீஸ்வரி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.