ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் ரேவதிக்கு கார்த்திக், தீபா திருமணம் குறித்து தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கிற்கு சப்போர்ட் செய்யும் சாமுண்டீஸ்வரி:
அதாவது, ரேவதி பரமேஸ்வரி பாட்டி பார்த்து உங்களுக்கு கார்த்திக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் தெரியும்ல.. அதை ஏன் சொல்லவில்லை என்று கேள்வி கேட்கிறாள்.
சாமுண்டீஸ்வரிக்கும் கார்த்திக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரிய வர அவள் கார்த்தியிடம், நீங்க உங்க முதல் மனைவி இறந்த பிறகு தானே கல்யாணம் பண்ணி இருக்கீங்க.. அப்படியே வாழ்க்கை முழுவதும் தனியாக இருந்திட முடியாது.. அதனால நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்லை என்று சொல்கிறாள்.
கொலை செய்ய சதி:
மறுபக்கம் சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் சாமுண்டீஸ்வரி புதிய கம்பெனி ஓபன் பண்றா.. அவளை ஏதாவது பண்ணனும் இன்று திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரியை கொன்று விடலாம் என முடிவெடுக்கின்றனர்.
அடுத்த நாள் முத்துவேல் சாமுண்டீஸ்வரியை கொல்ல முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இன்றைய எபிசோடில் காணலாம். .