தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி நவீனை வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துர்கா - நவீன் காதலை அறிந்த நவீன்:
அதாவது, நவீன் கார்த்தியை சந்தித்து நான் துர்காவை காதலிக்கிறேன், இந்த ஊரை விட்டு போனால் அவளோட தான் போவேன் என்று சொல்கிறான். இதையடுத்து கார்த்தியும் மயில்வாகனமும் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது துர்கா நவீன் வாங்கி கொடுத்த கொலுசை அணிந்திருப்பதை கவனிக்கின்றனர், இதனால் துர்கா மனதுக்குள் நவீன் மீது காதல் உள்ளது என்பதை புரிந்து கொள்கின்றனர்.
மாயாவுக்கு தெரிந்த உண்மை:
பிறகு கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ட்ராவல் ஏஜென்சிக்கு வருகின்றனர், ரேவதி ஆஸ்திரேலியா செல்லவிருந்த விமானத்தில் மாற்றம் இருப்பதாக சொல்கின்றனர், அதாவது காலை 6 மணிக்கு பதிலாக 10 மணிக்கு பிளைட் என சொல்லி அனுப்புகின்றனர்.
தூரத்தில் இருந்து இவர்களை கவனித்த மாயா ஏஜென்சியிடம் விசாரிக்க ரேவதி ஆஸ்திரேலியா செல்வது தெரிய வருகிறது. இதனால் மாயா ரேவதிக்கு போன் செய்து சந்தித்து பேச வேண்டும் என்று சொல்கிறாள்.
குடும்ப போட்டாவை திருட முயற்சி:
பிறகு சந்திரகலாவும் சிவனாண்டியும் சந்தித்து பேச கார்த்தியை சிக்க வைக்க ராஜசேதுபதி வீட்டில் ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்து குடும்ப போட்டோவை திருட திட்டமிடுகின்றனர்.
அடுத்து ரேவதி கார்த்தியிடம் சொல்லாமல் மாயாவை சந்திக்க வர மாயாவின் ஆட்கள் ரேவதியை கடத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.