முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மட்டும் இன்றி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும்... காமெடியாகவும் தொகுத்து வழங்கி அசால்ட் செய்து வருபவர் பிரியங்கா.

பிரியங்கா தேஷ்பாண்டே:

தொகுப்பாளினி டிடிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருப்பவரும் பிரியங்கா தேஷ்பாண்டே தான். விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது ஒருபக்கம் இருந்தாலும்,  குக் வித் கோமாளி, பிக் பாஸ், போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியவர்.

பிரியங்கா தேஷ்பாண்டே குறித்த எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் தான் பிரியங்காவின் அவசர திருமணம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் ஒரு பகீர் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிரியங்கா இரண்டாவது திருமணம்:

பிரியங்கா முதல் கணவருடனான விவாகரத்துக்கு பின்னர், இலங்கை தமிழரான டிஜே வசி என்பவருடன் டேட்டிங் செய்து வந்த நிலையில், பிரியங்காவுக்கு இந்தாண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. பிரியங்காவுக்கும் டிஜே வசிக்கும் சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. அதேபோல டிஜே வசி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்பட்டது. 

இதன் பின்னர் தான் இலங்கைக்கு நிகழ்ச்சிக்காக சென்ற பிரியங்கா வசியுடன் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து காதலிக்க துவங்கி பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். பிரியங்காவின் திருமணம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, அவசர அவசரமாக நடந்த நிலையில், இதற்க்கு காரணம் பிரியங்கா கர்ப்பமாக இருந்தது தான் என ஒருத்த தகவல் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது.

திருமணத்துக்கு முன்பே பிரியங்கா கர்ப்பமா?

 இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிரியங்கா போட்டோ ஒன்றை பகிர்ந்து அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது Instagram பக்கத்தில் 'உங்க வாய் உங்க உருட்டு' என்கிற கேப்டன் அடங்கிய டி-ஷர்ட் ஒன்றை அணிந்தபடி, வாயில் கை வைத்து சிரிக்கும் புகைப்படம் ஒன்றை பிரியங்கா ஷேர் செய்துள்ளார். இதை தொடர்ந்து, இது முழுக்க முழுக்க வதந்தி என்பதை குறிப்பிடும் விதமாக இப்படி ஒரு போஸ்டை பிரியங்கா ஷேர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.