ரூதமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
ரேவதியை காப்பாற்றத் துடிக்கும் கார்த்திக்:
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர் அமெரிக்கா செல்ல இருக்க, அந்த விஷயம் அறியும் கார்த்திக் ரேவதிக்கு ஆபரேஷன் செய்துவிட்டு அமெரிக்கா செல்லும்படி கேட்கிறான். இதனால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்தை தான் கொடுத்து விடுவதாகவும் சொல்கிறான்.
இதையடுத்து முருக பக்தர்கள் ஹாஸ்பிடலுக்கு வந்து ஐசியூவில் கந்த சஷ்டி கவசம் படித்து ரேவதிக்கு பிரசாதத்தை வைத்து விடுகின்றனர். கூடிய விரைவில் குணமடைந்து விடுவாள் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகின்றனர்.
மேலும் ரேவதிக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் அது அரிய வகை ரத்தம் என்பதும், மாரி என்பவருக்கு அந்த வகை ரத்தம் இருப்பதும் தெரியவந்து மாரியை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். பிறகு கார்த்திக் நானே நேரடியாக வந்து உங்களை அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.
ரேவதி சாவை காணத் துடிக்கும் காளியம்மாள்:
அடுத்ததாக சிவனாண்டி காளியம்மா வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல இதை செய்தது மாயா என்றும், மாயா இந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்ற உண்மையை உடைக்கிறாள். ரேவதி இறந்த செய்தி கேட்டால் தான் தனக்கு சந்தோஷம் என காளியம்மா சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.