ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீ மிதி திருவிழா நல்லபடியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

2 குழந்தை பெத்துக்கனும்:

பரமேஷ்வரி வீட்டில் எல்லாரும் ஒன்று கூடி இருக்க, ரேவதியிடம் என்ன வேண்டிகிட்ட என்று கேட்க 2 குழந்தை பெத்துக்கணும் என்று வேண்டிக்கொண்டதாக சொல்கிறாள். 

அடுத்து அவள் நடக்க முடியாமல் தாங்கி நடக்க கார்த்திக் அவளை கைத்தாங்கலாக அழைத்து செல்ல, பரமேஸ்வரி பாட்டி உட்பட எல்லாரும் இதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். 

ட்ராமா போட்ட ரேவதி:

இதனை தொடர்ந்து ரூமுக்கு சென்ற ரேவதி கால் வலிக்குது என்று ட்ராமா போட கார்த்திக் அவளுக்கு மருந்து போட்டு விடுகிறான். ஒரு கட்டத்தில் ரேவதி நடிப்பை புரிந்து கொண்ட கார்த்திக் பல்லி இருப்பதாக சொல்ல ரேவதி பயந்து ஓடுகிறாள். 

ஒழுங்காக சென்று தூங்குங்கள்:

பிறகு அவளிடம் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணனும்? என்று கேட்க, இந்த வலியை கூட தாங்கலைனா எப்படி பிரசவ வலியை தாங்குறது என்று சொல்ல கார்த்திக் ஒழுங்கா போய் தூங்குங்க என்று சொல்ல ரேவதி பாட்டு பாடி அவனை வெறுப்பேற்றியபடி இருக்கிறாள். 

அடுத்து சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் வீட்டிற்கு கிளம்ப, சந்திரகலா எல்லாரும் பரமேஷ்வரி வீட்டில் தான் இருக்காங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி கடுப்பாகி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு கிளம்புகிறாள். 

இந்த சூழலில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.