ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மகள்கள் மீது ஊற்ற இருந்த தண்ணீரில் பெட்ரோலை கலந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கார்த்தியை அலைய விடும் முத்துவேல்:

அதாவது காளியம்மா சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். ஏற்கனவே முத்து கார்த்தியை திசை திருப்ப மைதிலியை கடத்தி அடைத்து வைத்திருக்கிறான். 

இதனால் கார்த்திக் ஜானகி வீட்டுக்கு வர ஜானகி நடந்த விஷயத்தை சொல்ல அவன் முத்துவேலுக்கு போன் செய்ய இடத்தை மாற்றி மாற்றி சொல்லி கார்த்தியை அலைய விடுகிறான்.  

தீ மிதிக்கு தயாரான சாமுண்டீஸ்வரி மகள்கள்:

ஒரு கட்டத்தில் கார்த்திக் முத்துவேல் தன்னை அலைய விடுகிறான் என்பதை புரிந்து கொள்கிறான். இதனால் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து கார்த்திக் நேராக கோவிலுக்கு கிளம்பி வருகிறான். 

கோவில் தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடக்க சாமுண்டீஸ்வரி மகள்கள் நான்கு பேரும் தீ மிதிக்க தயாராகின்றனர். தண்ணீரில் பெட்ரோல் கலந்துள்ள நிலையில், சாமுண்டீஸ்வரி மகள்கள் எப்படி தப்பிப்பார்கள்? கார்த்தி அவர்களை எப்படி காப்பாற்றுவார்? என்ற பரபரப்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோடில் நகர்கிறது.