தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது ஜீ தமிழ். நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையடுத்து, தொலைக்காட்சிகளில் புதிய நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.


இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் சுதந்திர தினத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.


சுகி சிவத்தின் சிறப்பு பட்டிமன்றம்:


அதன்படி காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சுகி சிவம் தலைமையில் சுதந்திரத்துக்கு பெரிய தடையாக இருப்பது முதியோர் குணமா? இளையோர் மனமா? என்ற தலைப்பில் கலகலப்பான சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. 


தமிழா தமிழா விருதுகள்:


அதனை தொடர்ந்து மதியம் 11 மணி முதல் 2 மணி வரை " தமிழா தமிழா விருதுகள் 2024 " என்ற விருது விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த விருது விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி. வேல்முருகன், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தராஜன், முன்னாள் நிதி அமைச்சர் ஜெயக்குமார், கவிஞர் மானுஷ்யபுத்திரன், இயக்குனர் கோபி நாயர், நடிகை ரோஹினி, இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா, ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையின் முதல்வர் டாக்டர் தீரனிராஜன் என பலர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். 


சமூக நலனிற்காக பணியாற்றியவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜீ தமிழ் தமிழா தமிழா விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. 


என்ன படம் தெரியுமா?


அடுத்ததாக மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, டெல்லி கணேஷ் என பலரது நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ரத்னம் திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பிரீமியர் காட்சியாக ஜீ தமிழில் ஒளிப்பரப்பாக உள்ளது. 


ஒரு நில பிரச்னையை மையமாக வைத்து தமிழக, ஆந்திரா பார்டரில் நடக்கும் பரபரப்பான கதைக்களத்துடன் இந்த ரத்னம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இப்படி சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் திரைப்படமான ரத்னம் படம் வரை அனைத்தையும் மிஸ் பண்ணாமல் பார்த்து ஜீ தமிழுடன் உங்கள் சுதந்திர தின நாளை கொண்டாட தயாராகுங்கள்.