Baakiyalakshmi serial August 13 :  விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலான 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 13) எபிசோடில் ஈஸ்வரி அமிர்தாவை புண்படுத்தும் படி பேசியது பற்றி கேட்கிறான். "நீங்க எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க பாட்டி. எங்க வாழ்க்கையை நாங்க பார்த்து கொள்கிறோம். தயவு செய்து இது பத்தி இனி பேசாதீங்க. இந்த வீட்ல இது முன்னாடி எத்தனையோ பிரச்சினை நடந்து இருக்கு. அப்ப எல்லாம் நீங்க சொல்ற அந்த நாலு பேர் கேக்கலையா?" என்கிறான் எழில்.


 


"அப்படி என்ன புண்படுத்துற மாதிரி பேசிட்டேன். ஏழு கடல் ஏழு மலை தான் கொண்டு வான்னு சொன்னேனா? குழந்தை பெத்துக்கோன்னு நல்லது தானே சொன்னேன். உன்னோட அண்ணன் செழியன் வேலைக்கு போறான், கை நிறைய சம்பாதிக்கிறான், இதோ இரண்டாவது  குழந்தையும் பெத்துக்க போறான். ஆனா நீ இதுவரைக்கும் இந்த வீட்டுக்கு என்ன சம்பாரிச்சு கொடுத்து இருக்க. ஏதோ பாக்கியா இந்த வீட்டை உங்க அப்பா கிட்ட இருந்து வாங்கும் போது கொஞ்சம் பணம் கொடுத்த அவ்வளவு தான்" என்கிறார் ஈஸ்வரி.


 



 


"நான் செழியனும் எழிலும் பணம் கொடுக்கணும் என நினைக்கவே இல்லை அத்தை. அவன் வேலைக்கு போக சோம்பேறிதனம் படற பையன் எல்லாம் இல்லை. அவன் படம் பண்ணனும் என ஆசை படுறான். அதற்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டு தான் இருக்கான். தினமும் யாரைவது போய் பார்த்துகிட்டு தான் இருக்கான். இதை பத்தி இனி பேச வேணாம் அத்தை" என்கிறாள் பாக்கியா. 


 


"இன்னும் எத்தனை வருஷம் முயற்சி பண்ணிட்டே இருப்பான். இன்னும் 10 வருஷம் இல்ல 20 வருஷம். அதுவரைக்கும் குழந்தை பெத்துக்க வேணாம் என இருப்பானா. அதுக்குள்ள கணேஷ் திரும்பி வர மாட்டான் என என்ன நிச்சயம். அந்த உரிமையோடு பொண்டாட்டியையும், குழந்தையையும் கூட்டிட்டு போகமாட்டானா? ஏற்கனவே கடத்தி கொண்டு போய் வைச்சு எவ்வளவு பெரிய பிரச்சினை பண்ணான். இவங்களுக்கு என ஒரு குழந்தை இருந்தா தைரியமா சந்தோஷமா இருக்கலாம் இல்ல. நல்லதுக்காக தானே சொல்றேன். அது என் உங்க யாருக்குமே புரிய மாட்டேங்குது. அப்படி அந்த கணேஷ் வந்து கூப்பிட அனுப்பி வைச்சுடுவியா?" என ஈஸ்வரி கடுமையாக பேச அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். 


 



 


"இவ வந்தது அப்புறம் தான் இவனோட வாழ்க்கையே அழிந்துபோச்சு. வர்ஷினியை கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் 10 படம் கூட பண்ணி இருந்து இருக்கலாம். இவ என்னிக்கு காலடி எடுத்து வச்சதில் இருந்து இந்த வீட்டில் பிரச்சினை தான்" வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் ஈஸ்வரி. 


 


ஈஸ்வரியை எவ்வளவோ அமைதியாக இருக்க சொல்லி அனைவரும் சொன்னாலும் அவர் வாயை மூடுவதாக இல்லை. கோபமான எழில் "நீங்க அளவுக்கு அதிகமா பேசுறீங்க பாட்டி" என்கிறான். "அப்படி தான்டா பேசுவேன். என்ன பண்ணுவ என்னை அடிப்பியா?" என வம்புக்கு இழுக்கிறார் ஈஸ்வரி. அனைவரும் அமிர்தாவையும், எழிலையும் மாடிக்கு அழைத்து செல்கிறார்கள். 



அதற்கும் கடுப்பான ஈஸ்வரி "அப்போ எல்லாரும் அவங்க பக்கம் தான். இந்த கிழவி ஏதோ உளறிக்கிட்டு இருக்கா அப்படினு நினைக்கிறீங்க இல்ல" என சொல்ல "அவனுக்கு இப்போ நேரம் சரியில்ல. இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்" என ராமமூர்த்தி சொல்கிறார். 
ஈஸ்வரி அப்பாவும் அடங்காமல் "கெட்ட நேரம் அவனுக்கு இல்லை இவளுக்கு தான். இவன் தான் ராசி இல்லாதவ" என அமிர்தாவை பார்த்து சொல்லவும் கோபத்தில் எழில் பொங்கி எழுகிறான். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம்.