Siragadikka Aasai serial August 13 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 13 ) எபிசோடில் ஜோடிகளுக்கான போட்டியில் " நான் என் மாமியாரை போலவும் கணவரை போலவும் பேசி காட்டுகிறேன்" என சொல்லி விஜயா மற்றும் ரவியை போல பேசி காட்டுகிறாள் ஸ்ருதி. அதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்ததாக மீனா கண்களை கட்டி கொண்டு மூன்று மணி நேரத்தில் மூணு முழம் பூவை கட்டி முடிக்கிறாள். அவளை முத்து ஊக்குவிக்கிறான். 


 



 


அடுத்த ரவுண்டில் ஜோடிகளாக மேல வந்து ஒருவரை பற்றி ஒருவர் என்ன ஃபீல் செய்கிறார்கள் என சொல்ல வேண்டும். முதலில் மனோஜ் மற்றும் ரோகிணி வருகிறார்கள். "ரோகிணி என்கிட்டே எதையுமே இதுவரைக்கும் மறைத்தது கிடையாது. தினமும் என்ன நடக்கிறது என்பதை என்னுடன் சொல்லிவிடுவாள். எங்களுக்குள் ஒளிவு மறைவே கிடையாது" என மனோஜ் சொல்ல ரோகிணிக்கு அது உறுத்தலாக இருக்கிறது. மனோஜ் வாயை மூடி "இன்னிக்கு தான் நீ என் மேல எவ்வளவு அன்பு வைச்சு இருக்க என இப்போ தான் புரிஞ்சுது. நீ எனக்கு ஹபாண்ட்டா கிடைச்சது என்னுடைய லக்" என்கிறாள். 


 



 


அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் வருகிறார்கள். "ஸ்ருதி தான் எனக்கு எல்லாமே. அவள் தான் மிகவும் போல்ட்டா ஒரு முடிவு எடுத்து வீட்டை எதிர்த்து என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா. எந்த பக்கம் நியாயம் இருக்கோ அவங்களுக்கு சப்போர்ட்டா இருப்பா. அது அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச குவாலிட்டி. எங்க அப்பாவுக்கு மூணு பசங்க. அதே மாதிரி எங்களுக்கு மூணு குழந்தைங்க வேணும். ஸ்ருதியும் அதுக்கு ஓகே சொல்லுவா" என ரவி சொன்னதும் டென்ஷனான ஸ்ருதி "அது எப்படி ரவி என்கிட்ட கேட்காம நீ டிசைட் பண்ண முடியும்" என சொல்ல அனைவரும் அதை பார்த்து ஷாக்காகிறார்கள்.


 


அடுத்ததாக மேடைக்கு வந்த மீனாவும் முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசுகிறார்கள். "எங்களுக்கு கல்யாணம் நடந்த போது எப்படி இவர் கூட வாழ போறேன் என ரொம்ப பயமா இருந்துது. இந்த ஒரு வருஷத்துல அவரை நான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன். என்னோட அப்பா என்னை எப்படி என்ன பாத்துக்கிட்டாரோ அதே போல தான் இவரும் என்னை பாத்துக்குறாரு. எனக்கு என்னோட புருஷன் மட்டும் போதும். வேற யாரும் வேண்டாம்" என மீனா சொல்ல முத்து கண் கலங்கி விடுகிறான். அனைவரும் அவர்களுக்கு கைதட்டி பாராட்ட மனோஜ் ரோகிணி முகம் மாறிவிடுகிறது. 


 


அடுத்த ரவுண்டில் கணவன் மனைவி எவ்வளவு சம்பளம் எவ்வளவு என ஒருவருக்கொருவர் தெரியுமா? அதை எப்படி செலவு செய்கிறார்கள் என நடுவர்கள் கேட்கிறார்கள். "இதெல்லாம் பர்சனல் கேள்வி இதை கேட்க கூடாது" என சொல்ல "உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி சொல்லாதீங்க, கேக்க கூடாது என நீங்க சொல்ல முடியாது" என்கிறார்கள். "இப்போது ஆயிரத்தில் தான் சம்பாதிக்கிறேன். கூடிய விரைவில் லட்சங்களில் சம்பாதிப்பேன்" என்கிறான் மனோஜ். 


 



 


ரோகிணி அவளுடைய சம்பளம் பற்றி கூறுகையில் உணர்ச்சி வசப்பட்டு பிளாக்மெயில் பண்றவங்களுக்கு கொடுக்கணும் என சொன்னதும் அனவைரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்கணும் என சொல்லி சமாளிக்கிறாள் ரோகிணி. 


 


முத்து மீனாவின் சம்பளம் பற்றி சொல்லி அதை அவள் எப்படி எல்லாம் செலவு செய்கிறாள், எவ்வளவு சேமிக்கிறாள் என்பதை எல்லாம் சொல்கிறான். அதே போல மீனாவும் முத்து சம்பளம் பற்றி சொல்லி, தினசரி அவனுக்கு இருக்கும் செலவுகளை பற்றி சொல்கிறான். அவர்கள் சொல்வதை கேட்டு மனோஜ் கிண்டல் செய்ய, ஆடியன்ஸ் அனைவரும் அவர்களை கைதட்டி உற்சாக படுத்துகிறார்கள். அதை பார்த்து மீனாவும் முத்துவும் சந்தோஷப்படுகிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.