Zee Tamil Golden Awards: பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்.. நாளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

Zee Tamil Golden Awards: பெஸ்ட் ரொமான்ஸ், பெஸ்ட் மாமியார் - மருமகள், பெஸ்ட் காமெடி, குடும்பங்களைக் கவர்ந்த சீரியல் என பல தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ் தொலக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தொடர்ந்து தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்கள் மட்டுமின்றி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களைக் கவர்ந்து வருகின்றன. 

Continues below advertisement

இந்நிலையில், இந்த சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மக்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 2024ஆம் ஆண்டு தொடங்கியதும் ஜீ தமிழ் விருதுகள் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது,  தற்போது இந்த ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களைல் கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்தது. 

மிக பிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர் 1 சீரியல், பெஸ்ட் அம்மா பாசம், போல்ட் நடிகை, இதயம் தொட்ட தொடர், பெஸ்ட் ரொமான்ஸ், பெஸ்ட் ஜோடி, பெஸ்ட் மாமியார் - மருமகள், பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் ஆக்ஷன், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் காமெடி, குடும்பங்களை கவர்ந்த சீரியல் என பல தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இயக்குனர் ஹரி, மிஸ்கின், சுந்தர் சி, சீமான், தமிழிசை சௌந்தராஜன், மிருணாளினி, மீனாட்சி, சங்கீதா, விடிவி கணேஷ், ரித்விகா, ஜி.வி பிரகாஷ், அருண் ராஜா காமராஜா, கதிர் எனப் பல நடிகர், நடிகைகள் இந்த கோல்டன் மூமென்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

இந்த விருது விழா நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாகவும் முதல் பாகம் மே 1ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

மேலும் படிக்க: Vanitha Vijayakumar: அந்த மாதிரி ரோல் நமக்கு கிடைக்கல; மலையாள நடிகைகளுக்கு கிடைக்குது - வனிதா காட்டம்

கோயிலுக்கு போகாதீங்க; சினிமாக்கு போங்க - இயக்குநர் மிஷ்கின் சொன்னதுக்கு காரணம் இதுதான்!

Continues below advertisement