தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதியை கடத்த திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கடத்தப்பட்ட ரேவதி:

அதாவது திட்டமிட்டபடி ரவுடிகள் ரேவதியை கடத்துகின்றனர். சுவாதி கார்த்திக்கு போன் போட்டு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறாள். 

மயில்வாகனத்திடம் மாட்டிய டூப்ளிகேட் அப்பா, அம்மா:

இன்னொரு பக்கம் மாப்பிள்ளையின் டூப்ளிகேட் அம்மா அப்பா சாமுண்டீஸ்வரி வீட்டிலிருந்து நகை பணத்தை திருடிக் கொண்டு ஆட்டோவில் எஸ்கேப்பாக முயற்சி செய்கின்றனர். ஆட்டோ டிரைவராக மாறுவேடத்தில் வந்திருக்கும் மயில் வாகனம் இவர்களை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று  கட்டிப் போடுகிறான்.

காப்பாற்றிய கார்த்திக்:

கடத்தப்பட்ட ரேவதியை கர்ப்பிணி பெண் வசந்தா இருக்கும் இடத்திலேயே அடைத்து வைக்க ரேவதி உன்ன காப்பாற்ற தான் வந்ததாக சொல்லி கார்த்திக்கு லொகேஷன் அனுப்பி வைக்கிறாள். கார்த்தியின் அங்கு வந்து ரவுடிகளிடம் சண்டையிட்டு இருவரையும் காப்பாற்றுகிறான். 

இந்த நிலையில் வசந்தாவுக்கு பிரசவ வலி ஏற்பட அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். கார்த்திக் ரேவதி மண்டபத்தில் ஆக சொல்ல ரேவதி மண்டபத்திற்கு வர துர்கா கையில் பூச்சி மருந்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.