ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி கோபப்பட்டு சாப்பாட்டு தட்டை தூக்கி வீசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


சௌந்தரபாண்டி நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு வரேன் ஆனா நீ என்னடா என்று பேச வர முத்துப்பாண்டி சண்முகம் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு போய்ட்டான் அதானே அவன் சொன்னா இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டுமா? அவன் ரோடு முழுக்க பத்திரிகையை போட்டு போயிட்டான், அந்த பத்திரிகை எல்லாத்தையும் எடுத்து நான் ஊர் முழுக்க குடுத்துட்டு வந்து இருக்கேன் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என சொல்ல சௌந்தரபாண்டி சந்தோஷப்பட்டு இப்ப போடுடி சாப்பாடு என அவரும் சாப்பிட உட்காருகிறார்.


அதன் பிறகு பாக்கியம், பரணி மற்றும் சிவபாலனிடம் உங்க அப்பனும் அண்ணனும் கூட்டு சேர்ந்துட்டா கண்டிப்பாக அந்த விஷயத்தை நடத்தி முடிச்சிடுவாங்க, நாளைக்கு முதல் வேலையா சண்முகத்தை சந்தித்து ரத்னாவுக்கும் வெங்கடேசுக்கும் கல்யாணத்தை பண்ண சொல்லு, அப்படி இல்லன்னா இந்த ஊரை விட்டு போயிட சொல்லு என்று சொல்கிறாள். சிவபாலன் நான் இப்பவே போய் சொல்லிட்டு வரேன் என்று கிளம்ப பாக்கியம் இப்ப வேண்டாம் நாளைக்கு காலையில போய் சொல்லுங்க என்று தடுத்து நிறுத்துகிறாள்.


மறுநாள் காலையில் சண்முகம் வீட்டில் இசக்கி கனிக்கு தலையில் சிக்கு எடுத்துக் கொண்டிருக்க அவள் இதுக்குத்தான் நான் உன்கிட்ட தலையை காட்டுவதில்லை, இதுவே ரத்னா அக்காவா இருந்தா வலிக்காம சிக் எடுப்பா என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ரத்னா சிரிக்க கல்யாணம் நின்னு போச்சுன்னு சொன்னதும் உன் முகத்தில் சிரிப்ப பார்க்க முடியுது என்று கலாய்க்கிறார்கள்.


அதன் பிறகு வைகுண்டம் வெளியில் கிளம்ப சண்முகம் எங்கே போறீங்க என்று கேட்க சௌந்தர பாண்டிக்கு போய் சமாதானம் பேசிட்டு வருவேன் என சொல்ல தங்கைகள் எல்லாரும் அதெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் அதான் அண்ணன் பேசிட்டு வந்துடுச்சுல அதுவே போதும் என தடுத்து நிறுத்துகின்றனர்.


இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் பரணி சண்முகம் பாக்கியம் சொன்ன விஷயங்களை சொல்ல அவன் அதெல்லாம் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது, ஊரை விட்டு போக முடியாது திரும்பவும் தங்கச்சி கல்யாணத்துல அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது, எதுவாக இருந்தாலும் நான் இந்த ஊரில் இருந்து பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறான்.


அதன் பிறகு ரத்னா ஸ்கூலுக்கு வர வெங்கடேஷிடம் உங்க தங்கச்சி மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா அவ சொக்கத்தங்கம் என்று சொன்னதற்காக நன்றி சொல்ல அவன் நான் அன்னைக்கு உண்மைய தான் சொன்னேன் என்று சொல்கிறான். அதன் பிறகு ரத்னா இப்பவும் எனக்கு உங்களை பிடிக்கும் ஆனால் அண்ணன் சொன்னாதான் உங்களோட கல்யாணம் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறாள்.


இந்த சமயம் பார்த்து அங்கு வரும் சக டீச்சர் உங்களுக்கு கல்யாணமா வாழ்த்துக்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அங்க பத்திரிக்கை கொடுத்துட்டு இருக்காங்க என்று சொல்ல அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள்.