சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் வந்து குணசேகரனிடம் சொத்து மொத்தமும் போச்சு, ஜீவானந்தம் என்ற ஒருவர் வந்து உங்களின் மெடிக்கல் எக்விப்மென்ட் கம்பெனியை ஆக்கிரமித்துவிட்டார். உங்களின் வேலை ஆட்களை எல்லாம் வெளியில் அனுப்பி விட்டார்கள் என சொல்கிறார். அதை கேட்ட ஒட்டு மொத்த குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. ஈஸ்வரி இது அனைத்தும் குணசேகரனின் பிளான் தான் ஜீவானந்தம் என்ற ஒரு நபரை வைத்து சொத்து அனைத்தையும் ஆட்டையை போட தான் இந்த டிராமா எல்லாம். அதனால் தான் நமக்கு கவுண்ட் டவுன் கொடுத்து கொண்டு இருந்தார் என அனைவரிடம் சொல்கிறாள் ஈஸ்வரி. ஜனனியும் அதுதான் உண்மையாக இருக்கும் என நம்புகிறாள். அந்த குணசேகரனை ஜெயிக்க விடமாட்டேன் என ஆவேசமாக பேசி அவளும் அங்கு கம்பெனியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க சக்தியை அழைத்து கொண்டு செல்கிறாள். 


 



ஃபர்ஹானாவை குணசேகரன் அநாகரீகமாக பேச மரியாதையா பேசுங்க என கண்டிக்கிறான். அதற்கு எகிறி வந்த கதிர் பலமாக தாக்கப்பட்டான். ஜனனி ஃபர்ஹானாவை அடையாளம் கண்டு கொண்டு அன்று உங்களுடன் வந்த ஆள் எங்கே என கேட்கிறாள். நீங்கள் சத்தம் போடாமல் அமைதியாக இருந்தால் தோழரை சந்திக்கலாம். அவர் இப்போது மீட்டிங்கில் இருக்கிறார். இங்கே வெயிட் பண்ணுங்க என்கிறார். சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரும் உள்ளே வர அழைப்பு வருகிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. 


 



இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட் வெளியானதில் குணசேகரன், ஜனனி என அனைவரும் மீட்டிங் ரூமில் காத்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஜீவானந்தம் உள்ளே இருந்து மாஸாக என்ட்ரி கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஜீவானந்தத்தை பார்த்து ஜனனி " ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் எந்த உரிமையில் நீங்க உள்ள வந்தீங்க? என கேட்கிறாள். அதற்கு ஜீவானந்தம் "நீ தான் ஜனனியா மா ?" என கேட்டதும் ஜனனி மட்டும் அல்ல குணசேகரன் மற்றும் அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். அதை தொடர்ந்து பல வாக்குவாதங்கள் நடைபெற்று பின்னர் அது கைகலப்பாக மாறுகிறது. சண்டை நிறுத்தி பார்க்க முயற்சித்த ஜீவானந்தம்   முடியாததால் துப்பாக்கியை எடுத்து மேலே பார்த்து சுடுகிறார். பின்னர் குணசேகரன் உனக்கு பாத்து நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள இந்த இடத்தை விட்டு காலி பண்ணுங்க என சொல்கிறார். ஜீவானந்தம்   ஏதோ பேச அதை கேட்டு கதிர் உறைந்து போய் நிற்க குணசேகரனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 




மிகவும் பரபரப்பான இன்றைய எபிசோட் தொடர்ச்சியாக அடுத்து என்ன நடக்கும், ஜீவானந்தம் அடுத்த ஸ்டேப் என்ன? அடிபட்ட குணசேகரன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? ஜனனியின் யூகம் தப்பாக போனதால் அடுத்து என்ன நடக்க போகிறது? இவை அனைத்திற்கும் விடை வரும் எபிசோடுகளில் தெரியவரும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.