ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை காணலாம். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணியிடன் கல்யாணம் பற்றி கேட்கிறான். அதற்கு அவள் இது அப்பாவின் வேலை என நினைத்து முழு சம்மதம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஷண்முகம் சந்தோசமாகிறான். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 


அதாவது, ஷண்முகமும் பரணியும் பேசி கொண்டிருக்கும் போது பரணியை வீட்டில் கூப்பிடுகிறார்கள். இதன் பிறகு ஷண்முகம் ஹாலுக்கு செல்கிறான். அவனை சௌந்தரபாண்டி உட்காருங்க மாப்பிள்ளை என அழைத்து அருகில் உட்கார வைக்கிறான், கொஞ்ச நேரத்தில் பரணி காபி கொண்டு வந்து ஷண்முகத்துக்கு கொடுத்து அவன் கன்னத்தை கிள்ள பிறகு அது ஷண்முகத்தின் கற்பனை என தெரிய வருகிறது.


இதனையடுத்து பரணி காபியுடன் வந்து ஷண்முகத்துக்கு கொடுக்க போக அந்த சமயம் சௌந்தரபாண்டி முதலில் மாப்பிள்ளைக்கு கொடுமா என்று சொல்ல ஷண்முகமும் அவனது தங்கைகளும் அதிர்ச்சி அடைகின்றனர். ஷண்முகத்துக்கு கண்கள் கலங்க சௌந்தரபாண்டி என்ன மாப்பிள்ளை சும்மா உக்கார்ந்துட்டு இருக்கீங்க, அந்த கலரை உடைத்து எல்லாருக்கும் கொடுங்க என ஷண்முகத்தை அவமானப்படுத்துகிறார். பரணியும் தனக்குள் இருக்கும் வருத்தத்தை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறாள்.


அதன் பிறகு ஷண்முகம் தனது தங்கைகளோட வீட்டுக்கு நடந்து வர நான்கு தங்கைகளும் சௌந்தரபாண்டியையும் சிவபாலனையும் திட்டுகின்றனர். அதன் பிறகு வழியில் அப்பா வைகுண்டம் போதையில் விழுந்து கிடக்க ஷண்முகம் அவரை கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.


வீட்டுக்கு போனதும் அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே சென்று இப்போ உனக்கு சந்தோசமா இருக்குமே, என்னை திட்டணும் போல இருக்குமே என கோபப்படுகிறான், மேலும் உன்ன மாதிரி நானும் தங்கச்சிகளை பற்றி நினைத்து பார்க்காமல் தப்பு பண்ண பார்த்தேன், இனிமே இப்படி பண்ண மாட்டேன் என வருத்தப்பட இதை பார்த்து அவனது நான்கு தங்கைகளும் பீல் செய்யும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.