தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனி சாப்பிடாமல் இருக்க பரணி கையில் சாப்பாட்டுடன் வீட்டுக்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, இசக்கி இருந்து இருந்தா இப்படி ஆகியிருக்காது என பேசியவர்கள் அந்த இடத்தை பரணி பிடிச்சுட்டா என்பது போல சந்தோஷப்படுகின்றனர்.
அதிர்ச்சியில் ஷண்முகம்
மறுநாள் காலையில் முப்பிடாதி ஷண்முகத்தை பார்த்து பேசிய போது இசக்கியை முத்துப்பாண்டி அடித்த விஷயத்தை உலற அதை கேட்டு ஷண்முகம் அதிர்ச்சி அடைகிறான். ஆனால் இசக்கி மேல் இருக்கும் கோபத்தில் அவளுக்கு இதெல்லாம் தேவை தான் என்று சொல்கிறான்.
ஷண்முகத்தை சமாதானப்படுத்தும் பரணி
வீட்டுக்கு கோபமாக வரும் ஷண்முகம் பரணியிடம் முத்துப்பாண்டி இசக்கியை அடித்தானா என்று கேட்க முதலில் ஷண்முகத்தை சமாதானப்படுத்தும் பரணி ஒரு கட்டத்தில் ஆமாம் என சொல்ல ஷண்முகம் இசக்கிக்கு இது தேவை தான் என்று சொன்னாலும் நான் போய் அவனை எதுவும் கேட்க முடியாதே, கேட்டா என் புருஷன் என்னை அடிச்சானு சொல்லுவா என்று வருந்துகிறான்.
பரணி சமாதானம் செய்ய முயற்சிக்க அடித்தது உன் அண்ணனு சொல்லலையோ என்று சொல்ல தங்கைகளும் பரணி இந்த விஷயத்தை சொல்லாததால் அவளை தப்பாக நினைத்து கோபித்துக் கொள்கின்றனர்.
இதனால் பரணி சாப்பாடு சமைத்து வைத்து விட்டு ரூமுக்குள் சென்று வருத்தமாக இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.