நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படம் பற்றிய பேச்சு தான் எங்கும் உள்ள நிலையில், அது விஜய் டிவி சீரியல் வரை எதிரொலித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்தை வைத்து 4வது படமாக “ஜெயிலர்” படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷனும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ரஜினி தொடங்கி அனைவரது பேச்சும் இணையத்தில் கடும் விவாதத்தை கிளப்பியது. குறிப்பாக ரஜினி சொன்ன காகம் - கழுகு கதை தொடர்பாக விஜய் - ரஜினி ரசிகர்கள் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனிடையே இந்த இசை வெளியிட்டு விழா வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சன் டிவியில் மாலை 6 மணி ஒளிபரப்பாகவுள்ளது.
முன்னதாக படத்தின் அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக காவாலா பாடல் யூட்ட்யூபில் தொடர்ந்து இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் வழக்கமாக பஞ்ச் வசனங்களுடன் தோன்றிய ரஜினியை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
எங்கு பார்த்தாலும் ஜெயிலர்.. ஜெயிலர் என்று அந்த படத்தின் பேச்சு தான் நிலவி வரும் நிலையில் அது சீரியல் வரை எதிரொலித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் வந்த ஒரு காட்சியில், ஹீரோ தீபக், ஹீரோயின் நட்சத்திராவிடம், “கவலைய விடு. சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகப்போகுது. அப்பதான் சும்மா ஜாலியா விசில் அடிச்சிண்டு ரசிச்சு பார்க்கலாம்” என வசனம் பேச்சு காட்சி இடம் பெற்றது. இதன் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ரஜினி ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.