Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
முத்து டைனிங் டேபிள் மீது வாழை இலையை போட்டு, அதில் பக்கெட் பிரியாணியை பரப்பி வைக்கிறார். மனோஜ் விஜயாவையும், ரோகிணியையும் சாப்பிடுவதற்காக கூப்பிடுகிறார். ஆனால் விஜயாவும், ரோகிணியும் வர மறுக்கின்றனர். பின்னர், பிரியாணியை பார்த்ததும் ரோகிணி மனோஜை சாப்பிட அழைத்து செல்கிறார். "என்ன வேண்டிக்கிட்டு இந்த பிரியாணியை சாப்பிடுறோமோ அது நடக்கும்" என முத்து சொல்கிறார். பின் விஜயாவும் வந்து உட்கார்ந்து சாப்பிடுகிறார்.
அப்போது விஜயா, "ரோகிணி உன் அப்பா என்ன ஆனாரு" என கேட்கிறார். "நான் கால் பண்ணே அவரு நம்பரு ரீச் ஆகல. போன் ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கு" என ரோகிணி சொல்கிறார். "உங்க மாமாவுக்கு கால் பண்ண வேண்டியது தானே" என முத்து கேட்கிறார். விஜயா ரோகிணியிடம், அப்பா வராருனு சொன்ன வர்ல, மாமாவும் வர்ல இதெல்லாம் நம்பலாமா வேண்டாவானு எனக்கு ஒன்னுமே புரியல” என சொல்கிறார்.
சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் விஜயா ரோகிணியிடம் அவரின் அப்பா பற்றி கேட்கிறார். ”தெரியாம தான் கேட்குறேன். நிஜமாவே அப்படி ஒரு அப்பா இருக்காரா? இல்ல அது உன் கற்பனையா?. உன் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நான் இதை கேட்டுகிட்டு இருக்கேன். இன்னும் அவரு ஃபோன்ல பேசி கூட நான் இதுவரையிலும் கேட்டது இல்லை” என்கிறார் விஜயா. ”இந்த மீனா அம்மாவை பாரு மாசத்துக்கு ரெண்டு தடவை வந்து அவள பார்த்துட்டு போறாங்க” என்கிறார்.
”உன்னை நான் கொண்டு வந்த மருமகனு பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா நீ என்னை தினமும் அவமானப்படுத்திக்கிட்டு இருக்க” என்கிறார் விஜயா. பின் ரோகிணி ”என் அப்பா ஏன் வர்லனு இதுவரையிலும் எனக்கு தெரியல ஆண்டி” என்கிறார். ”மனோஜ் வேணும்னா இதெல்லாம் நம்பலாம் . ஆனா என்கிட்ட இதெல்லாம் நடக்காது” என விஜயா சொல்கிறார். ”உங்க அப்பா இங்க வர்லனு வை, அப்றம் இந்த வீட்ல உன் இடம் எங்க இருக்குனு நான் முடிவு பண்ணுவேன். மனோஜ்காக கூட நான் யோசிக்க மாட்டேன் ஜாக்கிறதை” என விஜயா சொல்கிறார்.
முத்து கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்ததை மீனா கண்டுப்பிடித்து விடுகிறார். முத்து தன் அம்மா குறித்து செண்டிமெண்டாக பேசுகிறார். ”அவங்க உங்கள என்ன தான் திட்டினாலும் அவங்களுக்கு ஒன்னுனா நீங்க தான் முதல் ஆளா வந்து நிக்குறிங்க. உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு” என மீனா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.