சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு எதிராக மொத்த குடும்பமும் திரும்பிவிட்டாலும் அவரின் ராஜாங்கமே நடைபெற்று வருகிறது. நேரத்திற்கு ஏற்ற மாதிரி பிளானை மாற்றிக்கொண்டே இருக்கிறார். இன்றைய (ஏப்ரல் 10) எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜனனி, கதிர் மற்றும் ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவை மூவரும் ஜனனியின் அம்மா மற்றும் தங்கையை தேடி செல்லும் போது ராமசாமியையும் கிருஷ்ணாசாமியையும் வழியில் பார்த்துவிடுகிறார்கள். அவர்களின் காரை பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
நேற்று நடந்தது என்ன?
நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் மாதர் சங்கத்தின் உதவியுடன் ஈஸ்வரி குணசேகரனை எதிர்கிறாள். தர்ஷினிக்கு இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைக்க விடமாட்டேன் என ஆவேசமாக பேசுகிறாள் ஈஸ்வரி. உடனே குணசேகரன் மொத்த பிளானை மாற்றி "தர்ஷினிக்கு கல்யாணம் என யார் சொன்னது? நான் கல்யாணம் செய்து வைப்பது என்னுடைய மகன் தர்ஷனுக்கும், உமையாள் மகள் கீர்த்திக்கும் தான்" என சொல்ல தர்ஷனை சம்மதம் கேட்க தர்ஷனும் ஒத்துக்கொள்கிறான். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது" என கேட்க ஞானம் நான் தான் ஆதாரம் என்கிறான் . ஆனால் குணசேகரன் ஞானத்தை அவமானப்படுத்தி விட்டு விசாலாட்சி அம்மாவை கேட்க அவரும் ஆமாம் தர்ஷனுக்கு தான் நிச்சயம் என சொல்கிறார். மாதர் சங்கத்தில் இருந்தவர்களை மிரட்டி அனுப்பி வைக்கிறார் குணசேகரன்.