பொங்கல் ஸ்பெஷலாக சிறகடிக்க ஆசை சீரியல் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல் வெளியாகி சீரியல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்களில் ஒன்று “சிறகடிக்க ஆசை”.


இன்று சீரியலின் இன்றைய ப்ரமோவில், அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட தன் அம்மா வீட்டிற்கு செல்கிறார். அங்கு விஜயா, மீனாவிடம் ”நீ போய் சமைக்குற வேலையை பாரு” என சொல்கிறார்.


பின் பாட்டி ”அங்க தான் மீனா சமைக்க சொல்லுற, இங்க நீ சமையல் பண்ணு” என சொல்கிறார்.   சமைத்து முடித்து அனைவரும் சாப்பிட அமருகின்றனர். காய்கறி வெட்டும் போது கையை வெட்டிக் கொண்டதால்,  ஸ்ருதி ”எனக்கு சாப்பிட கம்போர்டபிளா இல்லை” என சொல்கிறார். அதனால் விஜயா அவருக்கு ஊட்டி விடுகிறார். அப்போது பாட்டி 3 மருமகள்களுக்கும் ஊட்டி விட சொல்கிறார். மீனாவுக்கு மட்டும் விஜயா வேண்டா வெறுப்பாக ஊட்டி விடுகின்றார். 3 மருமகளையும் ஒரே மாதிரி நடத்தனும் என்கிறார் பாட்டி. உடனே பாட்டியும், முத்துவும் ஒருவரையொருவர் பார்த்து தம்ப்ஸ் அப் காட்டிக் கொள்கின்றனர். இத்துடன் ப்ரமோ நிறைவடைகிறது. 


சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் மனோஜ் இண்டர்வியூவ் செல்ல புறப்படுகிறார். அப்போது முத்து அவரை கலாய்க்கிறார். பின் கார் ஓட்டும் வேலை செய்தால் மாதம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என மனோஜ் இடம் சொல்கிறார் முத்து. இதைக் கேட்ட ரோகினி, “நீங்க படிக்கல கார் ஓட்டுறிங்க. அவரு 3 டிகிரி முடிச்சிருக்காரு அவரு ஏன் கார் ஓட்டனும்” எனக் கேட்கிறார். இதை கேட்டு மீனா கோபமடைந்தார். கார் ஓட்டுறது என்ன கேவலமான வேலையா என ரோகினியிடம் வாக்குவாதம் செய்கிறார். 


நீ நாள் முழுக்க நின்னாலும் ரூ.ஆயிரத்துக்கு மேல சம்பாதிக்க முடியாது என்கிறார் விஜயா. முத்து விஜயாவுக்கு பதிலடி கொடுத்ததும், ”இதெல்லாம் எத்தனை நாளைக்குனு நான் பாக்குறேன்” என்றார். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சீரியல் வெகு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 


முத்து- மீனா மனோஜ் ரோகினியின் வீட்டிற்கே சென்று வந்ததால், அடுத்து ரோகினி எப்போது வீட்டில் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பாத்துக் கொண்டிருக்கின்றனர். சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் வரும் 17ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. 



மேலும் படிக்க 


Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது - அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!


IND vs ENG: "இந்திய மைதானத்தை குறை சொல்ல மாட்டோம்! ஏன் தெரியுமா?" இங்கிலாந்து துணை கேப்டன் விளக்கம்